Golden Days! கோடீஸ்வரர் பி.ஆர்.ஷெட்டியின் ‘அது ஒரு கனாக்காலம்’

தனியார் ஜெட், சொகுசு கார்கள் மற்றும் ஆடம்பரமான புர்ஜ் கலீஃபாவில் சொத்து வைத்திருந்தவர் இந்திய கோடீஸ்வரர் பி.ஆர்.ஷெட்டி. வானத்தை தொடும் என்று சொல்லக்கூடிய உயரமான ஆடம்பரமான புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ஒரு முழு தளத்தையும் சொந்தமாக வைத்திருந்தவர் பி.ஆர் ஷெட்டி. தற்போது  ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையவே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது 

வியாபாரத்தில் வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த கோடீஸ்வரர் பிஆர் ஷெட்டி. $ 3.15 பில்லியனுக்கும் அதிகமான சொத்து மதிப்பு வைத்திருந்த அவர் உலக செல்வந்தர்களின் பட்டியலில் இடம் பெற்றவர். தற்போது வியாபாரத்தில் நட்டம் கண்டிருந்தாலும், உலக அளவில் பேசப்பட்ட தொழிலதிபரின் பொன்னான நாட்கள்….

Pics courtesy: Facebook

READ ALSO | மாடித் தோட்டம் சரி, 'டாக்ஸி தோட்டம்' கேள்விப்பட்டதுண்டா?

1 /5

பாவகுத்து ரகுராம் ஷெட்டி 1973ம் ஆண்டில் வெறுங்கையுடன், வளைகுடா நாட்டிற்கு வந்து, தனது திறமையால் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப்பெரிய தனியார் சுகாதார சேவை அமைப்பை உருவாக்கினார். வெற்றியின் உச்சத்தில் இருந்தபோது, தொழிலதிபர் $ 3.15 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருந்தார். உலக பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்தார். கர்நாடகாவின் உடுப்பியில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பி.ஆர்.ஷெட்டி மருந்தாளுநர் கல்வியை கற்றார். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றபோது, அவரிடம் இருந்தது $ 8 மற்றும் ஒரு பை மட்டுமே. அவரிடம் அப்போது இருந்த அந்த சொத்தும் திருட்டுப் போனது    Pics courtesy: Facebook

2 /5

ஆடம்பரமான கார்கள் மற்றும் விண்டேஜ் வாகனங்கள் மீது பிஆர் ஷெட்டிக்கு மீளாக் காதல் இருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடம்பரத்தின் அடையாளமாக கருதப்பட்ட மெர்சிடிஸ்-மேபாக் எம் 600 வைத்திருந்தார்  

3 /5

பிஆர் ஷெட்டி, 2014ம் ஆண்டில் தனியார் ஜெட் விமானம் ஒன்றின் 50% உரிமைகளை 4.2 மில்லியன் டாலருக்கு வாங்கினார். Pics courtesy: Facebook

4 /5

விருந்துகளை நடத்துவதற்காக புர்ஜ் கலீஃபாவில் இரண்டு தளங்களை வாங்கினார், முன்னாள் கோடீஸ்வரர் புர்ஜ் கலீஃபாவில் இரண்டு முழு தளங்களை $ 25 மில்லியனுக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. ஆடம்பரமான விருந்துகளை நடத்துவதற்காகவே இந்த சொத்தை வாங்கினார். Pics courtesy: Facebook

5 /5

The muddy waters என்ற ஆராய்ச்சி நிறுவனம் என்எம்சி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியபோது பிஆர் ஷெட்டியின் தொழில் சாம்ராஜ்ஜியம் ஆட்டம் கண்டது. ஷெட்டியின் நிறுவனம் $ 4 மில்லியனுக்கும் அதிகமான கடன்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அவர் தனது பெரும்பாலான சொத்துக்களையும் நிறுவனத்தையும் இழந்தார், அவர் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைவதற்கு ஷெட்டிக்குக் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு முன்னணி நாளிதழின் அறிக்கையின்படி, ஷெட்டி வளைகுடா நாட்டிற்கு மீண்டும் திரும்பி கெட்டுப்போன தனது நல்மதிப்பை மீண்டும் பெறுவேன் என்று சபதம் செய்திருக்கிறார். Pics courtesy: Facebook