இந்திய சந்தையில் ரெட்மி, சாம்சங் போன்ற பல நிறுவனத்தின் மொபைல்கள் பட்ஜெட் விலைக்குள் அதாவது ரூ.20,000க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.
ரெட்மி 9 ஆக்டிவ்: 6.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, 4ஜிபி ரேம் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனை கொண்டுள்ளது. 64ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ள இந்த மொபைல் கார்பன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.7,999 ஆகும்.
ஒன்ப்ளஸ் நார்ட் சிஇ2 லைட் 5ஜி: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ள இந்த மொபைலானது 6.59 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999 ஆகும்.
சாம்ஸங் கேலக்சி எம்32 ப்ரைம் எடிஷன்: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ள இந்த மொபைலானது 6000 எம்ஏஹெச் பேட்டரி திறனுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,499 ஆகும்.
ஒப்போ ஏ74 5ஜி: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ள இந்த மொபைலானது 6.49இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,990 ஆகும்.
ரெட்மி 9ஏ ஸ்போர்ட்: 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த மொபைலானது 6.53இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 ஆகும்.