புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாங்கும் போது பல அம்சங்களில் கவனம் செலுத்துகிறோம், அதில் ஒன்று பேட்டரி ஆயுள் அதாவது, ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை நேரம் நீடிக்கும் என்ற அம்சத்தின் மீது நிச்சயம் கவனம் செலுத்துவோம். உங்கள் தொலைபேசியின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்களை பயன்படுத்துவது மிகவும் பயன் தரும்.
நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இணையத்தில் சர்ஃபிங் செய்கிறீர்கள் என்றால், உங்கள் தொலைபேசியின் செயலி முழு வேகத்தில் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் தொலைபேசியின் அமைப்புகளில் உள்ள பேட்டரி ஆப்ஷனுக்கு சென்று, 'Enhanced Processing' ஆப்ஷனை ஆஃப் செய்யவும்.
உங்கள் ஸ்மார்ட்போனில் பேஸ்புக், யூடியூப் மற்றும் இதுபோன்ற பிற பயன்பாடுகளிலிருந்து புஷ் நோடிபிகேஷன் வந்தால், அவை அதிக பேட்டரியை சாப்பிட்டு விடும். செட்டிங்ஸ் சென்று நீங்கள் அதிகம் பயன்படுத்தாத செயலிகளின் புஷ் நோடிபிகேஷனை ஆப் செய்து பேட்டரியைச் சேமிக்கவும்.
Wifi பயன்படுத்துவததன் மூலம் உங்கள் மொபைல் டேட்டாவைச் சேமிக்கலாம். ஆனால் போனின் பேட்டரி மிகவும் வீணாகிறது. வைஃபையை ஆனில் வைத்திருந்தால், பேட்டரி வேகமாக ட்ரெயின் ஆகும், எனவே தேவைப்படும் போது மட்டும் வைஃபை ஆப்ஷனை ஆன் செய்யவும், மீதமுள்ள நேரத்தில் அதை ஆஃப் செய்யவும்.
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை உபயோகித்த பிறகு ஷட் டவுன் செய்வது போல, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்ஸ்களை பயன்படுத்திய பிறகு மூடிவிடவும். செயலிகள் பின்புலத்தில் கூட இயங்கிக் கொண்டே இருப்பதால், ஃபோனின் பேட்டரியை அவை சாப்பிடுகின்றன.
உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி வேகமாக ட்ரையின் ஆகிய நிலையில், பேட்டரியை சேமிக்க விரும்பினால், ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள பவர் சேவிங் மோடை (power saving mode) பயன்படுத்தவும், இது தொலைபேசியின் பேட்டரியை சேமிக்கும்.