பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..

Home Workouts To Reduce Buttocks : நம்மில் பலருக்கு பின்புறம் மட்டும் பெரிதாக இருக்கும். இதை குறைக்க என்னென்ன உடற்பயிற்சிகளை செய்யலாம் தெரியுமா?

Home Workouts To Reduce Buttocks : பலருக்கு உடல் முழுவதும் சின்னதாக இருக்கும். ஆனால், பின்புறம் மட்டும் ஏதோ ஒரு காரணத்தால் பெரிதாக இருக்கலாம். இது, அவர்களுக்கே அவர்களின் உடல் குறித்த ஒருவித பாதுகாப்பின்மையை ஏற்படுத்தக்கூடும். உடல் எடை அதிகமாக இருப்பவர்களும் கூட, பின்புறத்தை குறைக்க சில உடற்பயிற்சிகளை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?

1 /8

பின்புற தசையை குறைக்கும் வீட்டு உடற்பயிற்சிகள். இதை செய்து, உங்கள் பின்புறத்தை ஒல்லியாக்கலாம். 

2 /8

படி ஏறுதல்: படி ஏறும் உடற்பயிற்சி, வீட்டிலேயே செய்யக்கூடிய மிக எளிய உடற்பயிற்சியாகும். இதனை செய்வதால், பின்புறம் சீக்கிரமே குறையும் என கூறப்படுகிறது. தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை படி ஏறலாம். 

3 /8

ஸ்குவாட்ஸ்: வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சிகளுள் ஒன்று ஸ்குவாட்ஸ். இந்த உடற்பயிற்சியை செய்வதால், பின்புற தசைகள் விரைவில் குறைவதாக கூறப்படுகிறது. இதை செய்கையில் கால்கள் மற்றும் தொடை சதையும் கூட குறையும்.

4 /8

ரன்னிங்: ஓட்டப்பயிற்சி செய்வது நல்ல கார்டியோ உடற்பயிற்சியாக அறியப்படுகிறது. பின்புற தசை, தொடை தசை ஆகியவற்றை குறைக்க உதவும் இந்த உடற்பயிற்சியை செய்தால் உடலில் இருக்கும் கலோரிகளும் வேகமாக குறையும். 

5 /8

லஞ்சஸ்: லஞ்சஸ் உடற்பயிற்சி, நமது கீழ் உடலை குறைக்கும் சூப்பரான உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இதனால், தொடை தசைகள் குறைவது மட்டுமன்றி கால்களும் வலுவடையும்.

6 /8

லெக் ரைசஸ்: லெக் ரைசஸ் உடற்பயிற்சியை தரையில் படுத்தவாறு செய்ய வேண்டும். இதனால், தொப்பை குறைந்து, உள் தசைகளும் கொழுப்புகளும் குறையும். இதை, தினமும் காலையில் செய்யலாம். 

7 /8

லேட்டரல் பேண்ட் வாக்: தொடை தசையை குறைக்க ஒரு பேண்ட் இருக்கிறது. இதனை கால்களில் அணிந்து நடக்கலாம். இதனால், பின்புற தசைகள் குறையும். 

8 /8

ஜம்பிங் ஜேக்ஸ்: இதய துடிப்பை அதிகரிக்கும் கார்டியோ உடற்பயிற்சிகளுள் ஒன்று, ஜம்பிங் ஜேக்ஸ். இதை செய்வதால், தொடை மற்றும் பின்புற தசைகள் குறைவதுடன் ஒட்டுமொத்த உடல் எடையும் குறையும்.