அதிக கொழுப்பினாலும் எடையினாலும் உடலில் ரத்த அழுத்தம், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை தொடர்ந்து பின்பற்றினால் உடல் எடை குறைவது மட்டுமில்லாமல் முடி வளர்ச்சி, தோல் பளபளப்பு, உடல் ஆரோக்கியம் போன்றவை ஏற்படும்.
உங்களுக்கு பசி எடுக்கும் போது ஆரோக்கியமற்ற உணவை உண்பதை விட ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால், இதனால் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்
அதிக கலோரி அடங்கிய வெண்ணெய், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் இனிப்பு போன்ற பொருட்களை உட்கொள்வதை குறைத்துக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கு அரிசிமாவு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், அதற்கு பதிலாக கோதுமை மற்றும் கோதுமைமாவு பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.