பாடாய் படுத்தும் ஏழரை நாட்டு சனியின் பாதிப்புகள் நீங்க செய்ய வேண்டியவை!

சனியின் தீய பார்வை வாழ்க்கையை அழிக்கிறது. ஏழரை நாட்டு சனியினால் பாதிக்கப்பட்ட அந்த ராசிக்காரர்கள் பொருளாதார, உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் தான்ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசை என்ற பெயரைக் கேட்டவுடன் மக்கள் மனதில் ஒரு பயம் ஏற்படுகிறது.

சனி நீதியின் கடவுள் என்பதால், கர்மத்திற்கு ஏற்ப பலன்களைக் கொடுக்கிறார். சில ராசிகளுக்கு ஏழை நாட்டு சனி அல்லது சனி திசை நடக்கிறது. இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும்  மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். இந்நிலையில், சில ராசிக்காரர்கள் சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும்.

1 /5

ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, அனுமனை வணங்குவதும் அவசியம் என்று கருதப்படுகிறது. எனவே, அமாவாசை நாளில், ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யலாம், அஹனுமன் மந்திரத்தையும் உச்சரிக்கவும். இந்த பரிகாரத்தின் மூலம்,  உடல், மன மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம். 

2 /5

அமாவாசை அன்று  நதியில் நீராடினால் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். இத்துடன் அனைத்து துன்பங்களும், பிரச்சனைகளும், தடைகளும் நீங்கி விடும். அதிலும் சனிக்கிழமை அன்று வரும் அமாவாசை இந்த பரிகாரத்திற்கு மிகவும் சிறந்தது.

3 /5

ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள். அவருக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது தவிர கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது.

4 /5

சனி பகவானின் சாலிசாவைப் பாராயணம் செய்யுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது.

5 /5

சனி தோஷம் நீங்க, உளுந்து, கறுப்பு எள், இரும்பு ஆகியவற்றை கருப்பு துணியில் நனைத்து எண்ணெயில் தோய்த்து, சனிபகவானுக்கு அர்ச்சனை செய்வது நிவாரணம் தரும்.