காபி அல்லது தேநீர் குடிப்பது நமக்கு உடனடியாக புத்துணர்ச்சியை தரக்கூடும் என்றாலும் அதிகளவு காபி உடலில் தேவையில்லாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
காபி குடிப்பது நம்மை விழிப்புடன் வைத்திருக்கும் என்பதால் அதிகளவு காபி தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது. அதிலும் குறிப்பாக இரவில் காபி குடிப்பதால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.
அதிகளவு காபி குடிப்பதால் உடலில் அட்ரீனலின் ஹார்மோன் அதிகளவில் வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக ஒருவருக்கு பதட்டம் ஏற்படலாம்.
பொதுவாக காபி உணவை ஜீரணிக்க உதவும் என்றாலும் அதிகப்படியான காபி வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். காபியில் நிறைந்துள்ள காஃபின் வயிற்று போக்கு, வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
அதிகமாக காபி குடிப்பதால் ரத்தத்தில் அழுத்தம் ஏற்படுகிறது, காபியிலுள்ள காஃபின் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. எனவே அதிகளவு காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
காபி குடிப்பது உங்கள் உடலுக்கு உடனடியாக சுறுசுறுப்பை கொடுத்தாலும், சில நிமிடங்களுக்கு பிறகு அது உங்களை சோர்வடைய செய்யும் என்பதால் அதிகளவில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.