கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது.
கற்றாழை அழகு மற்றும் சுகாதார நலன்களுக்கு பெரிதும் பயனளித்து வருகிறது. இதற்கு கரணம் இதிலுள்ள மருத்துவ பண்புகள் தான். கற்றாழை மூலம் பல நன்மைகள் கிடைத்தாலும், அதன் மூலமாக சில பக்க விளைவுகளும் ஏற்படத்தான் செய்கிறது. அவற்றை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்!
கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் கற்றாழையில் உள்ள எரிச்சலூட்டும் குணங்களால் அதை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது கர்ப்பிணி பெண்களின் கருப்பை சுருக்கங்களை அதிகரிக்க கூடும் என்பதால் பிரசவ சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.
கற்றாழை உடலில் உள்ள போட்டாசியம் அளவை குறைத்து, மேலும் சீரற்ற இதயத் துடிப்பு, பலவீனம் மற்றும் சோர்வை ஏற்படுத்த கூடும் என்பதால் முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் இதனை சாப்பிட வேண்டாம்.
கற்றாழையில் உள்ள லேடெக்ஸ் வயிற்றில் அதிகமான பிடிப்புகள் மற்றும் வலிகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. இதனால் வயிற்று பிரச்சனைகள் உள்ளோர் தவிர்ப்பது நல்லது.
கற்றாழை ஜெல்லானது கண்களில் சிவத்தல், தோல் தடிப்புகள், எரிச்சல் மற்றும் எரியும் உணர்வு போன்றவைகள் பெரும்பாலானோருக்கு ஏற்படுத்துகிறது.
கற்றாழை நேரடியாகவோ அல்லது காப்ஸ்யூல் வடிவத்திலோ சாப்பிடுவதன் மூலம் வாய்வழியாக எடுத்துக்கொள்வதும் பாதுகாப்பானது அல்ல. இந்த முறை உங்கள் சருமத்திற்கு சிறிதளவும் நன்மை செய்யாது என்பது மட்டுமல்லாமல், இது உங்கள் வயிற்றில் ஒரு மலமிளக்கிய விளைவையும் ஏற்படுத்தும். இது சங்கடமான இரைப்பை குடல் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகளுக்கு வாய்வழியாக கற்றாழை ஒருபோதும் சாப்பிட வழங்க வேண்டாம்.