சுக்கிர பெயர்ச்சி... உச்சத்திற்கு போகும் இந்த 5 லக்கி ராசிகள்... கட்டுக் கட்டாக பணம் கொட்டும்

Venus Transit Benefits: சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ள நிலையில், அந்த காலகட்டத்தில் இந்த 5 ராசிகளின் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் எந்த பிரச்னையும் வராது. அந்த 5 ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

சுக்கிரன் வரும் டிச. 28ஆம் தேதி பெயர்ச்சி அடையும் (Shukra Peyarchi) நிலையில், ஜன.28ஆம் தேதிவரை கும்பத்தில் நீடிப்பார். இந்த ஒரு மாத காலமும் அவர்களுக்கு ஜாக்பாட் தான். எனவே, புத்தாண்டு அவர்களுக்கு பொருளாதாரத்தில் பெரிய திறப்புகளையும் கொண்டு வருகிறது எனலாம்.

 
1 /8

சுக்கிரன் உங்களின் ஜோதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் (Venus Transit Benefits), வாழ்க்கை செல்வம் நிறையும், காதல் வாழ்க்கையில் அன்பும் நிறையும்.   

2 /8

அந்த வகையில், இன்னும் 18 நாள்களில் அதாவது சுக்கிரன் வரும் டிச. 28ஆம் தேதி இரவு 11.48 மணிக்கு கும்ப ராசியில் பெயர்ச்சி (Shukra Peyarchi) அடைகிறார். தொடர்ந்து ஒரு மாதம் அதாவது ஜன. 28ஆம் தேதி வரை கும்ப ராசியிலேயே இருப்பார். இதன்மூலம், 5 ராசிக்காரர்கள் பணக்காரர்களாக திகழ்வார்கள். அந்த 5 ராசிகள் குறித்து இங்கு காணலாம்.  

3 /8

மேஷம் (Aries): புத்தாண்டில் உங்களுக்கு சுபமான நிகழ்வுகள் நடக்கும். திருமண யோகம் கைக்கூடும். உங்களின் குடும்பத்தில் நீண்ட நாள்களாக வரன் தேடி வருபவர்களுக்கு நல்ல செய்தி வரும். பழைய முதலீடுகளில் இருந்து பெரும் வருமானம் வரலாம்.   

4 /8

ரிஷபம் (Taurus): நீண்ட நாளாக இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறலாம். வேலை தேடி வருபவர்களுக்கும், புதிய வேலைக்கு செல்ல நினைப்பவர்களுக்கும் நல்ல செய்தி வரும்.  

5 /8

துலாம் (Libra): புத்தாண்டில் உங்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால் பணமழை கொட்டும். எந்த வேலையை தொட்டாலும் வெற்றியே கிடைக்கும். வேலையில் முதலாளி உங்களால் மகிழ்ச்சி அடைவார். பொறுப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள்.   

6 /8

மகரம் (Capricon): இந்த காலகட்டத்தில் பார்ட்னர் உடனான வணிகத்தில் நல்ல வருவாய் அதிகரிக்கும். இதன்மூலம் நீங்கள் நிலம் அல்லது கார் கூட வாங்கும் வாய்ப்புள்ளது. உறவினர்களுடன் வீடு தொடர்பான பிரச்னை முடிவுக்கு வரும். பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும்.  

7 /8

கும்பம் (Aquarius): புத்தாண்டில் வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லைகள் முழுவதுமாக நீங்கும். வேலையிலும், தொழிலிலும் பெரிய உயரங்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள், கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.