Clove Side Effects: கிராம்பின் பக்கவிளைவுகள் என்ன?

Side Effects of Clove: மசாலா பொருள்களில் ஒன்றான கிராம்பு உணவுகளிலும் பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு பல நன்மைகளை கொண்டிருந்தாலும் அது சில பக்கவிளைவுகளையும் உண்டாக்க கூடும். கிராம்புகளில் இருக்கும் முக்கிய கலவையான யூஜெனால் ஒவ்வாமையை உண்டாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. கிராம்பு என்ன மாதிரியான பக்கவிளைவுகள் உண்டாக்கும் என்று பார்க்கலாம்.

1 /5

கிராம்பு சாப்பிடுவதால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கலாம். ஏற்கனவே உடலில் குளுக்கோஸ் அளவு குறைவாக உள்ளவர்கள் கிராம்புகளை உட்கொள்ளக்கூடாது.

2 /5

கிராம்பு அதிகமாக உட்கொள்வது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

3 /5

கிராம்புகளை அதிகமாக உட்கொள்வது கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும்.

4 /5

கர்ப்பமாக இருக்கும் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் கிராம்புகளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது.

5 /5

ஹீமோபிலியா போன்ற இரத்தப்போக்கு கோளாறுகள் ஏற்பட்டால், கிராம்பு நுகர்வு தீங்கு விளைவிக்கும். கிராம்பு இரத்தத்தை மெலிக்கும் தன்மை கொண்டது. இது வெட்டப்பட்டாலோ அல்லது தோலுரித்தாலோ அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தும்.