pig butchering scams: மோசடி செய்பவர்கள் தற்போது பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை சுருட்ட புதுவழிகளை தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் பிக் புட்சரிங் ஸ்கேம் (pig butchering scam) ஒன்று.
பிக் புட்சரிங் ஸ்கேம் என்றால் என்ன? இந்த மோசடியில் வேலை வாங்கிக் தருவதாக கூறுவது, போலி கிரிப்டோ முதலீடு, உயர் முதலீட்டு திட்டங்கள் என மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
குறி வைத்து இயங்குகின்றனர். ஒருவரை ஏமாற்றுவதற்கு முன் அவரை அனைத்து வகையிலும் நம்ப வைக்கின்றனர். சுருக்கமாக சொல்வது என்றால் நம்ப வைத்து கழுத்தறுக்கும் மோசடி இது
ஹனி ட்ராப் மோசடியும் இந்த வகைக்குள் வருகிறதா? ஒருவருடன் காதல் அல்லது பாலியல் உறவை ஏற்படுத்தி அவரிடம் இருந்து தேவையான தகவல்களைப் கறப்பது ஹனி ட்ராப், இது ரகசியத்தை தெரிந்துக் கொள்வதற்கான வழி. ஆனால், பிக் புட்சரிங் ஸ்கேம் பணத்தை மட்டுமே குறியாக கொண்டு செயல்படுவதை குறிக்க பயன்படுத்தும் வார்த்தை ஆகும்
வேலை வாங்கிக் தருவதாக கூறுவது, போலி கிரிப்டோ முதலீடு, உயர் முதலீட்டு திட்டங்கள் என பணம் தொடர்பான விஷயங்களில் ஏமாற்றுவது பிக் புட்சரிங் ஸ்கேம் ஆகும்
விரிக்கும் வலையில் சிக்குபவர்களிடம் நட்புடன் பழகி நம்பிக்கையை பெற்ற பிறகு பணம் பறிக்கும் வேலை தொடங்கும். வேலை வாங்கித் தருவதாக பொய் வாக்குறுதிகள் கொடுப்பது, அதிக வட்டி கிடைக்கும் என்று பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவது என இந்த மோசடி உலகளவில் நடந்து வருகிறது.
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு மோசடியில் சிக்குபவர்கள், வேலை கிடைத்துவிட்டாலும், வெளிநாட்டிலும் ஏமாற்றப்படுவார்கள்
எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்; அது உங்களை காப்பாற்ற உதவும்
சமூக வலைதளங்களில் அறிமுகம் ஆனவர்களிடம் கவனமாக பழகவும் OTPகள் அல்லது ஆதார் எண் போன்ற முக்கியமான தனிப்பட்ட ஐடிகளை ஒருபோதும் பகிர வேண்டாம்
தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை இது. இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.