எனது சிறந்த ஆட்டங்களுக்கு இந்த வீரர்தான் காரணம் - நன்றி கூறிய ஷிகர் தவாண்

நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காத ஷிகர் தவாண் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், ரோஹித் சர்மா உடனான தொடக்க ஓப்பனராக இறங்கி இந்திய அணிக்கு விளையாடிய நினைவுகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

  • Jan 17, 2024, 19:14 PM IST

 

 

 

 

 

 

1 /7

தவாண்,"ரோஹித்துடனான எனது ஒத்துழைப்பும், பேட்டிங்கின் போது மறுமுனையில் அவரது ஆதரவும் அணிக்கு வலுவான தொடக்கங்களை வழங்குவதற்கும், வெற்றிகரமான சேஸிங்கும், பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு அடித்தளம் அமைப்பதற்கும் கருவியாக இருந்தது" என கூறினார்.    

2 /7

"ரோஹித்தின் ஆதரவால் நான் பல சிறந்த ஆட்டங்களை விளையாடி உள்ளேன். அதற்கு நான் நன்றி கூறுகிறேன்" என ஷிகர் தவாண் தெரிவித்தார்.

3 /7

ஷிகர் தவாண்,"பேட்டிங்கின் போது மறுமுனையில் ரோஹித் சர்மா தேவையான ஆறுதலையும் உறுதியையும் தருகிறார். 2019இல் மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் இருவரும் இணைந்து எடுத்த 193 ரன்கள்தான் எங்களின் சிறந்த இன்னிங்ஸ்" என நினைவு கூர்ந்தார்.

4 /7

மேலும், "துபாயில் நடந்த 2018 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 210 ரன்களை சேர்த்தது இரண்டாவது சிறந்த இன்னிங்ஸ் என்று நினைவுகூர்கிறேன்" என்றார்.

5 /7

ஒருநாள் கிரிக்கெட்டில் 167 போட்டிகளில் 17 சதம், 39 அரைசதத்துடன் 6793 ரன்களை தவாண் குவித்துள்ளார். 

6 /7

ரோஹித் சர்மா - ஷிகர் தவாண் ஜோடி இந்திய அணிக்கு மிகவும் வெற்றிகரமான தொடக்க ஜோடியாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளங்குகின்றனர். 

7 /7

ஷிகர் தவாண் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.