வருகிறது சனி பெயர்ச்சி... இந்த 5 ராசிகளுக்கு சோதனைகள் வாழ்வில் வரிசையாக வரும்!

Saturn Transit, November 15 2024: வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் கும்ப ராசியில் சனி அதன் வக்ர நிலையில் இருந்து வழக்கமான நிலைக்கு மாற்றமடைகிறது. இதனால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் கஷ்ட காலம் பிறக்கப்போகிறது. 

இந்த நவம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்கள் வெவ்வேறு ராசிகளுக்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றன. அந்த வகையில், வக்ர நிலையில் இருந்து சனி மாற்றமடைவதும் 12 ராசிக்காரர்களின் (12 Zodiac Signs) வாழ்வில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். சில ராசிகளுக்கு அசுபமாகவும், சில ராசிகளுக்கு சுபமாகவும் கருதப்படும்.

1 /8

சனி அதன் வக்ர நிலையில் இருந்து கும்ப வரும் நவ. 15ஆம் தேதி மாற்றமடைய (Shani Margi 2024) இருக்கிறது. இது 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.   

2 /8

ஆனால், இந்த 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் கஷ்ட காலம் வரும் என கணிக்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.  

3 /8

மேஷம்: சனியின் நேரான இயக்கம் மேஷ ராசிக்காரர்களுக்கு (Aries) பிரச்னையை உண்டாக்கும். இந்த நேரத்தில் சனியின் மூன்றாம் கண் இந்த ராசிக்காரர்கள் மீது விழும். சனி இவர்களின் வாழ்வில் தடைகளை உருவாக்கும், வேலையில் இருப்பவர்களுக்கு கடுமையான சவால்களை அளிக்கும். வேலை கூட பறிபோகலாம். காதல் வாழ்விலும் பிரச்னை வரலாம். தொழிலை விரிவாக்கும் திட்டமும் நிறைவேறாமல் போகலாம்.   

4 /8

கடகம்: கடக ராசிக்காரர்கள் (Cancer) சனியின் இயல்பான இயக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வாழ்வில் கடும் அழுத்தம் உருவாகும். தனிப்பட்ட வாழ்வு தொடர்ந்து சோதனைக்கு உள்ளாகி வரும். யாருடனும் தேவையின்றி வாக்குவாதம் செய்யாதீர்கள். பணியிடத்திலும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது.   

5 /8

சிம்மம்: சனியின் இந்த நிலையால் சிம்ம ராசிக்காரர்களும் (Leo) கடுமையான பணிசுமைக்கு ஆளாவார்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடனும் பிரச்னை வரும். பணியில் வளர்ச்சி இல்லாமல் நீங்கள் கவலைக்குள்ளாவீர்கள். தொழிலும் கடுமையான பிரச்னையை சந்திப்பீர்கள்.   

6 /8

மகரம்: சனியின் இந்த நிலையால் மகர ராசிக்காரர்கள் (Capricon) கடுமையான பொருளாதார சிக்கலுக்கு ஆளாவார்கள். கணவன் மனைவிக்கு இடையில் பிரச்னைகள் உருவாகும். பேச்சுவார்த்தையாலேயே பிரச்னையை தீர்த்துக்கொள்ளுங்கள்.   

7 /8

மீனம்: மீன ராசிக்காரர்கள் (Pisces) இந்த காலகட்டத்தில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்னையை சந்திப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் பெரும் குழப்பத்தில் இருப்பீர்கள். வெற்றி உங்கள் வசம் வராது. எனவே, உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் கவனமாக இருங்கள்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.