சனிப்பெயர்ச்சி 2025: தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். ஏழரை நாட்டு சனி காலத்தை நிர்ணயிக்கும், சனி பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சனி பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும், ஏதோ ஒரு வகையில், வாழ்க்கையில் மிக முக்கிய மாற்றத்தை கொண்டு வரும். சனி பெயர்ச்சி, ஏழரை நாட்டு சனி காலத்தையும் நிர்ணயிக்கிறது என்பதால், அதனால் சில ராசிகள் அதிலிருந்து விடுபடுவார்கள். அதே நேரத்தில் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கும்.
சனி பெயர்ச்சி 2025: ஜோதிடத்தில் மிக முக்கிய நிகழ்வாக, சனிப்பெயர்ச்சி கருதப்படுகிறது. ஒரு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, சனிப்பெயர்ச்சி நிகழவுள்ளது. இந்நிலையில் ஜென்ம சனியால் பாதிக்கப்பட போகும் ராசி குறித்தும், அவர்களுக்கான எளிய பரிகாரங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஏழரை நாட்டு சனி: சனிபகவான் எந்த ராசியில் பெயர்ச்சி ஆகிறார் என்பதை பொறுத்து, ஏழரை நாட்டு சனி காலம் எந்த ராசிகளுக்கு தொடங்கும், ஜென்ம சனி பாதிப்பு யாருக்கு, விரைய சனி பாத சனி அஷ்டம சனி என பலவித தாக்கங்களை சனிப்பெயர்ச்சி நிர்ணயிக்கிறது.
மீனத்தில் சனி பகவான்: சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகவதால், மீன ராசிக்கு ஜென்ம சனி காலம் தொடங்கும். இரண்டரை ஆண்டு காலம் நீடிக்கும் இந்த ஜென்ம சனி காலம், கொஞ்சம் பாடாய்படுத்தி எடுக்கும்.
மீன ராசி: ஜென்ம சனி காலத்தில், மீன ராசியினருக்கு ஒரு பிரச்சனை முடிந்தால் அடுத்த பிரச்சனை என வாழ்க்கையில் சிக்கல்கள் அதிகரிக்கலாம். இதற்காக கவலை கொள்ள வேண்டியதில்லை. நிதானத்துடன் சாதுரியமாக செயல்பட்டால், பிரச்சனைகளை எளிதாக கையாளலாம்.
ஜோதிட பரிகாரங்கள்: சில எளிய ஜோதிட பரிகாரங்கள், ஜென்ம சனி பாதிப்பை பெரிதும் குறைக்கும். பொதுவாக ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதும், நோயாளிகளுக்கு சேவை செய்வதும், சனீஸ்வரனின் மகன் மனதை குளிர்விக்கும். எனவே உங்களால் முடிந்த அளவு அன்னதானம் மற்றும் உதவிகளை செய்யுங்கள்.
எறும்புகளுக்கு உணவு: பொதுவாக அன்னதானம் மிகவும் சிறந்தது. அதிலும் ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம் என்பது ஐதீகம். எனவே எலும்புகளுக்கு உணவளிக்கும் பரிகாரம் மூலம் சனி பகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். பச்சரிசி மாவை ஒரு கைப்பிடி எடுத்து எறும்புகளுக்கு உணவளிப்பது சிறப்பு.
விரைய சனி மற்றும் பாத சனி: வரும் மார்ச் மாதம் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனீஸ்வரன் பெயர்ச்சியாகும் நிலையில், வாசிக்கு விரய சனியும், கும்ப ராசிக்கு பாதசனிக்காலமும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜென்ம சனி உடன் ஒப்பிடுகையில், விரைய சனி மற்றும் பாத சனி காலத்தில், பொதுவாக பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.