இன்னும் இரண்டே நாட்கள்... சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

Sani Nakchatra Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவரது அனைத்து மாற்றங்களுக்கும் அதிகப்படியான முக்கிவத்துவம் உள்ளது.

Sani Nakchatra Peyarchi Palangal: சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் அதிக காலத்திற்கு இருப்பதால், அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கும். ஏப்ரல் 6 ஆம் தேதி சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியாக உள்ளார். இதனால் அனைத்து 12 ராசிகளிலும் (Zodiac Signs) ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். முதலீட்டில் லாபம் உண்டாகும். தடைபட்ட பணிகள் அனைத்து இப்போது முடிவடையும்.

2 /13

ரிஷபம்:  சனி நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பணி இடத்தில் சாதகமான பலன்களை அளிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட தூரப் பயணம் செல்ல வாய்ப்புகள் உண்டாகும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனம் தேவை. இப்போது முதலீடு செய்வதை தவிர்க்கவும், செலவுகள் அதிகமாகும். குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். 

4 /13

கடகம்: கடக ராசிக்கார்ரகளுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். 

5 /13

சிம்மம்: சனி நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல வித நல்ல பலன்கள் கிடைக்கும். தொல்லைகள் தீரும். உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மனம் அமைதியாக இருக்கும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அனைத்து வித பணிகளிலும் வெற்றி காண்பீர்கள். இதுநாள் வரை இருந்துவந்த தடைகள் இப்போது சரியாகும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

7 /13

துலாம்: தொழிலதிபர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். தொழிலில் லாபம் இருக்கும். இப்போது முதலீடுகளை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் பொருளாதார நிலை மேம்படும்.

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு சனியின் நட்சத்திர மாற்றம் நன்மை தரும். தொழிலுக்கு இது உகந்த நேரமாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். 

9 /13

தனுசு: உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்புகள் உங்கள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். சனி பகவானின் அருளால் பெரும் நிதி ஆதாயம் கிடைக்கும், புதிய வருமான வழிகள் உண்டாகும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாக்வும் இருக்கும். 

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி பல விதங்களில் சுகமானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். சனி பகவானின் அருளால் இவர்கள் வாழ்க்கையில் நிதி நெருக்கடி அனைத்தும் நீங்கி பணவரவு அதிகமாகும். எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். 

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். சனி பகவானின் நட்சத்திரத்தில் ஏற்படும் மாற்றத்தால் உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும். நிதி ஆதாயம் ஏற்படும். நிதி பிரச்சனைகள் தீரும். மூத்த அதிகாரிகள் உடல் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்வில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும்.

12 /13

மீனம்: நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். வியாபாரத்தில் உள்ள மீன ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் புரிதலும் அன்பும் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். 

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.