டிக்ளோர் செய்யாமல் ஆட்டம் காட்டிய ரோகித், பெவிலியனையே பார்த்துக் கொண்டிருந்த கில்..!

வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் நிறைய நேரம் டிக்ளோர் செய்யாமலேயே இருந்தார் ரோகித் சர்மா

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

1 /8

இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களும், வங்கதேசம் அணி 149 ரன்களும் எடுக்க இந்திய அணி நேற்று இரண்டாவது நாளிலேயே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

2 /8

முதல் இன்னிங்ஸில் சொதப்பியதுபோல் விராட், ரோகித் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப இந்த இன்னிங்ஸில் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார் சுப்மன் கில். அவருக்கு பக்கபலமாக ஆடினார் ரிஷப் பந்த்.

3 /8

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் இருவம் சிறப்பாக ஆட இந்திய அணியின் ஸ்கோரும் மளமவென உயர்ந்தது. ஒருபக்கம் ரிஷப் பந்த் அதிரடி காட்ட, சுப்மன் கில் நிதானமான ஆடினார். 

4 /8

இதனால், ரிஷப் பந்த் முதலில் சதமடித்தார். வங்கதேசம் அணிக்கு சீக்கிரம் அதிக லீட் செட் செய்ய வேண்டும் என அதிரடி ஆட்டத்தைக் காட்டினார் ரிஷப். முடிவில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

5 /8

  அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சதமடித்தார் சுப்மன் கில். அப்போது இந்திய அணி டிக்ளோர் செய்யும் என கில்லே எதிர்பார்த்தார். ஆனால் பெவிலியனில் இருந்த ரோகித் சர்மா எழுந்து டிரெஸ்ஸிங் ரூமுக்குள் சென்றுவிட்டார்.

6 /8

ஒவ்வொரு ஓவர் முடிவிலும் இப்போதாவது டிக்ளோர் அறிவிப்பாரா? என சுப்மன் கில் எதிர்பார்க்க டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து எந்த சிக்னலும் வரவில்லை. ஒரு கட்டத்தில் வங்கதேச பிளேயர்களே எப்போ தான் ரோகித் டிக்ளோர் அறிவிப்பார் என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உருவானது. 

7 /8

கடைசியாக 514 ரன்கள் முன்னிலை பெற்றபோது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டிக்ளோர் அறிவித்தார். அப்போது தான் சுப்மன் கில் பெருமூச்சுவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார். இன்னொரு பக்கம் வங்கதேச அணியின் பிளேயர்களும் இந்திய அணி டிக்ளோர் செய்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

8 /8

515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்கதேசம் அணி விளையாடி வருகிறது. அசாத்தியமான இலக்கு என்பதால் இந்திய அணி எந்த அழுத்தமும் இல்லாமல் பந்துவீசி வருகின்றனர்.