இந்திய அணியின் அடுத்த தோனி இவரு, கொஞ்சம் உஷாரு - எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்

இந்திய அணியின் அடுத்த தோனி இவரு என்பதை மனதில் வைத்து விளையாடுமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி விளையாட இருக்கும் நிலையில் ரிக்கி பாண்டிங் முக்கிய எச்சரிக்கை ஒன்றை கொடுத்திருக்கிறார்.

 

1 /9

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.  

2 /9

அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்க இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஒருமுறை கூட இந்த கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றதில்லை. 

3 /9

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில், இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனி ரிஷப் பந்த் தான் என தெரிவித்துள்ளார்.

4 /9

ரிஷப் பந்தின் கிரிக்கெட்டை எல்லோரும் பார்த்திருக்கிறோம், அவர் நல்ல ஆளுமை படைத்தவர், கிரிக்கெட்டை நேசிக்கிறார். ஒரு சாம்பியன் பிளேயர் கூட என ரிஷப் பந்தை புகழ்ந்துள்ளார்.   

5 /9

ரிஷப் பந்த் சில ரன்களை குவித்து வேடிக்கை காட்ட மட்டும் விளையாடுவதில்லை. அவர் ஏற்கனவே 4, 5 டெஸ்ட் சதங்களைப் அடித்துள்ளார். 9 முறை தொண்ணூறுகளில் அவுட்டாகியிருக்கிறார். 

6 /9

அதனால், இவரை இந்திய அணியின் மற்றொரு தோனி என்று சொல்லலாம். நல்ல திடமான மன உறுதியை கொண்டவர் ரிஷப் பந்த். அவர் கார் விபத்துக்குப் பிறகு ஐபிஎல் போட்டி விளையாடுவார் என நான் நினைக்கவில்லை.

7 /9

ஆனால் நிச்சயம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் என என்னிடம் கூறி, அதன்படியே களமும் கண்டார் ரிஷப் பந்த் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.   

8 /9

தோனி 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 அல்லது 4 சதங்கள் (6) அடித்துள்ளார். இந்த பையன் ரொம்ப நல்லவன். அவர் ஒரு தீவிர கிரிக்கெட் வீரர். நிச்சயமாக அவர் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்.  

9 /9

அவரின் பேட்டிங் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ரிக்கிங் பாண்டிங் கூறியுள்ளார்.