சத்தமே இல்லாமல் மிகப்பெரிய சாதனையை செய்துள்ள கேஎல் ராகுல்!

கேஎல் ராகுல் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சின் போது 8000 சர்வதேச ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

 

1 /6

இந்திய அணியின் விக்கெட் கீப்பர்/பேட்டர் கேஎல் ராகுல் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அந்த தொடரில் பாதியில் விலகிய ராகுல் சமீபத்தில் சென்னையில் பங்களாதேஷுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் விளையாடினார்.  

2 /6

கேஎல் ராகுல் முதல் இன்னிங்ஸில் 16 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்களும் அடித்து இருந்தார். இந்த ரன்களை அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 8000 ரன்களை கடந்துள்ளார்.  

3 /6

இந்தியா - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு 7978 ரன்கள் அடித்து இருந்தார். 3வது நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்கள் அடித்த போது ராகுல் 8000 ரன்களை கடந்தார்.  

4 /6

இதற்கு முன்பு இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34357 ரன்களும், அவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 26965 ரன்கள் அடித்துள்ளனர். ராகுல் டிராவிட் 24064 ரன்களும், ரோகித் சர்மா 19245 ரன்களும், சவுரவ் கங்குலி 18433 ரன்களும் அடித்துள்ளனர்.   

5 /6

கேஎல் ராகுல் இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34.12 சராசரியில் 2901 ரன்கள் அடித்துள்ளார். இதில் 8 சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் அடங்கும். இதற்கு முன்பு சிறிது நாட்கள் கேர்கள் ராகுல் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்துள்ளார்.  

6 /6

மேலும், 77 ஒருநாள் போட்டிகளில் 2851 ரன்களும்,  72 டி20 போட்டிகளில் 2265 ரன்களும் அடித்துள்ளார். அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே இந்தியர் இவர்தான்.