Jio இன் அசத்தல் திட்டம்: புதிய திட்டத்தில் இவை அனைத்தும் கிடைக்கும்

Jio தனது வாடிக்கையாளர்களுக்கான சிறந்த தரவுத் திட்டங்களைக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்த இணைப்பில் இணைய அனுபவம் இன்னும் சிறப்பாகிறது. இதன் முழு விவரத்தை இங்கே பார்போம்.

1 /3

புதுடெல்லி: Reliance Jio நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல வகையான அற்புத திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக கொண்டு வருகின்றது. தற்போதும் ஜியோ ஒரு அட்டகாசமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அவை, ரூ.597 மற்றம் ரூ .599 திட்டமாகும்.

2 /3

ரிலையன்ஸ் ஜியோ ரூ .597 திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் 90 நாள் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ .597 ஆகும். இது சமீபத்தில் தொடங்கப்பட்ட No Daily Limit திட்டங்களில் ஒன்றாகும். இதில் 75 ஜிபி தரவு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. எந்த தினசரி வரம்பும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்தலாம். வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளின் இலவச சந்தா ஆகியவை இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.  

3 /3

ரிலையன்ஸ் ஜியோ ரூ .599 திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு இதில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்கிலும் கால் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் ஜியோ செயலியின் இலவச சந்தாவும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.