தற்போதைய 2K கிட்ஸ் பாஷையில் Gaslighting என்பதை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். காதல் உறவிலோ, திருமண உறவிலோ Gaslighting என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. அதுகுறித்து இங்கு காணலாம்.
Gaslighting என்றால் என்ன என்பது குறித்தும், உறவில் அது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தும் இதில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
திருமண உறவிலோ அல்லது காதல் உறவிலோ நீங்கள் மிகவும் குழப்பத்துடன் இருந்தாலோ; உங்கள் பார்ட்னர் குறித்து நீங்கள் நினைப்பதெல்லாம் தவறாக இருக்குமோ என உங்களை நீங்களே கேள்விக் கேட்டுக்கொள்கிறீர்கள் என்றால் உங்கள் பார்ட்னர் உங்களை Gaslighting (உசுப்பேற்றுதல்) செய்கிறார் என அர்த்தம்.
Gaslighting என்பது உங்களை உணர்ச்சி ரீதியில் கட்டுப்படுத்தி கொடுமைப்படுத்துவதாகும். இது ஆரோக்கியமற்ற உறவில் தென்படும். உங்கள் பார்ட்னர் நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, உடைக்க முயற்சிப்பார், நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வார்.
அதாவது, உங்களுக்கு இடையேயான சண்டையில் ஒரு விஷயத்தை உங்கள் பார்ட்னர் பேசினார் என்று வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதைப் பற்றி பேசும்போது, அப்படி நான் பேசவே இல்லை என அடம்பிடிப்பார். உங்களின் கோபத்தையும், பல்வேறு உணர்ச்சிகளையும் உசுப்பேற்றுவார்.
இதுதான் Gaslighting. இது உங்கள் உறவில் இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் உறுதிசெய்துவிடும்.
ஒரு விஷயத்தில் நீங்கள் பொய் பேசுவதாக உங்கள் கணவரோ/மனைவியோ கூறுவதன் மூலம் உங்கள் மீது குற்றச்சாட்டை முந்வைக்கின்றனர். இதன்மூலம், உங்களின் நேர்மையை கேள்விக்குட்படுத்துவார்.
உங்கள் பார்ட்னர் உங்களிடம் பேசுவதை தவிர்த்தாலோ அல்லது பேசாமல் இருப்பதன் மூலம் தண்டிப்பதாக கூறினாலோ அவர் உங்களை உசுப்பேற்ற நினைக்கிறார் என அர்த்தம். இதன்மூலம் நீங்கள் உங்களின் உணர்ச்சிகளை பலவீனப்படுத்துவதாக அமைகிறது.
நீங்கள் எடுக்கும் முடிவுகளையும் விமர்சித்து பேசுவதும் உங்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்க மறுப்பதற்கான அர்த்தம். இதனால், உங்களுக்கு சரியென பட்டத்தை நீங்கள் செய்ய முடியாமல் அவர்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியதாகிவிடும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் அந்த உறவு ஆரோக்கியமற்றதாகிவிட்டது என உணர்ந்துகொள்ளவும்.
பொறுப்பு துறப்பு: இதுகுறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடனடியாக நிபுணரை ஆலோசிக்கவும். இவை பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிசெய்யவில்லை.