தங்கம் போல் ஜொலித்த அம்பானி மருமகள்... ராஜ கம்பீரத்துடன் நிதா அம்பானி - ரிசப்ஷென் காஸ்ட்யூம் இதோ!

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் (Anant Ambani - Radhika Merchant Wedding) ஆகியோரின் திருமணம் நேற்று நிறைவடைந்த நிலையில், இதில் மணமகள் ராதிகா மற்றும் மணமகனின் தாயார் நிதா அம்பானி ஆகியோரின் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன. 

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்தையொட்டி முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா ஆகியோரின் ஆடைகள் வைரலாகி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

1 /8

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் மும்பை ஜியோ வோல்ர்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.   

2 /8

திருமண விழா கடந்த ஜூலை 12ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த விழா நேற்றோடு (ஜூலை 15) நிறைவடைந்தது.  

3 /8

இந்த மூன்று நாள் விழாவின் மங்கள் உத்சவ் நிகழ்வு நேற்று நடந்தது. இந்த நிகழ்விலும் பல்வேறு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   

4 /8

இந்நிகழ்வில் மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஆனந்த் அம்பானியின் தாயார் இஷா அம்பானி ஆகியோரின் ஆடைகளும், அணிகலன்களும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.   

5 /8

மணமகள் ராதிகாவின் மேலாடை என்பது பழங்கால பெண் தெயவங்களின் ஆடைகளை போன்று, நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்து வடிவமைக்கப்பட்டது. மேலும் கோல்டன் நிற ஸ்கர்ட் அணிந்திருந்தார். ஆங்கிலத்தில் இந்த ஆடை Dolce & Gabbana என்றழைக்கப்படுகிறது.   

6 /8

ராதிகா மெர்ச்சன்டின் ஆடை மட்டுமின்றி அவரின் ஆபரணங்களும் பரவலான கவனத்தை பெற்றன. கழுத்தில் வைரத்தோடு தங்கப்பிளேட்டால் ஆன நெக்லஸை அவர் அணிந்திருந்தார். இவற்றை நீங்கள் புகைப்படத்திலும் பார்க்கலாம்.   

7 /8

மணப்பெண் தங்கம் போல் ஜொலிக்க, மணமகனின் தாயார் நிதா அம்பானி அரச குடும்பத்து கம்பீரத்துடன் தோற்றமளித்தார். நிதா அம்பானி இளஞ்சிவப்பு நிறத்தில் பளப்பளக்கும் பனாரசி சேலையை அணிந்திருந்தார். அதில் அதிக பூ போன்ற வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. சேலையின் முந்தானை முழுவதுமாக பின்னாடி விடாமல், அவரின் மணிக்கட்டில் கட்டியிருந்தது இன்னும் அழகு சேர்த்தது. லைட் நிற சேலைக்கு ஏற்ற அடர்த்தியான பிங்க் நிற பிளவுஸை அணிந்திருந்தார்.   

8 /8

மேலும், நிதா அம்பானி வைரம் மற்றும் மரகத்தால் ஆன ஆபரணங்களை அணிந்திருந்தார். அம்பானி குடும்பத்தினரும் அனைவருமே வைரம் மற்றும் மரகத்தால் ஆன ஆபரணங்களையே அணிந்திருந்தனர். நிதா அம்பானி இரண்டு அடக்குகளில் நெக்லஸை அணிந்திருந்தார். அவரின் பிரேஸ்லட்டுகள், கம்மல்கள் ஆகியவையும் அவருக்கு அழகுச் சேர்த்தன.