ஜீவி பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' படத்தின் டீசர் வெளியானது!

Rebel Teaser: ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி உள்ள ஜீ.வி. பிரகாஷ் குமாரின் 'ரெபல்' பட டீசர் நல்ல வரவேப்பை பெற்றுள்ளது.

 

1 /6

ஜிவி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.  ஜீ.வி. பிரகாஷின் மாறுபட்ட தோற்றத்தில் 'ரெபல்' படத்தின் டீசர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.  

2 /6

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் உருவாகும் 'ரெபல்' படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.   

3 /6

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.   

4 /6

உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.   

5 /6

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.   

6 /6

டீசரில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றமும், ஆவேசமான கதாபாத்திர குணாதிசயமும் ரசனையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.