குரு உதயம்: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... வாழ்க்கை டாப் கிளாசாக இருக்கும்

Guru Udhayam Palangal:அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக இருக்கும் குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

Guru Udhayam Palangal: சுப பலன்களை அளிக்கும் கிரகமான குரு பகவான் மே 7 ஆம் தேதி அஸ்தமனமானார். அவர் இன்னும் சில நாட்களில் உதயமாகவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். குரு உதயம் குருவால் ஏற்படும் சுப பலன்களை அதிகரிக்கும். குரு உதயம் மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த காலம் பல வித நன்மைகளை அளிக்கக்கூடியதாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.  

1 /9

கிரகங்களில் குரு பகவானுக்கும் சனி பகவானுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. சனி பெயர்ச்சியும் குரு பெயர்ச்சியும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன.   

2 /9

மே 1 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். தற்போது அஸ்தமன நிலையில் உள்ள குரு இன்னும் சில நாட்களில் உதயமாகவுள்ளார். இது ஒரு முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கபடுகின்றது. 

3 /9

குரு உதயம் மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த காலம் பல வித நன்மைகளை அளிக்கக்கூடியதாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.    

4 /9

ரிஷபம்: குரு பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தின் தாக்கத்தால் இந்த காலகட்டத்தில், உங்கள் நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். பல நல்ல செய்திகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். கூட்டாண்மையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். 

5 /9

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியும் குரு உதயமும் சாதகமான விளைவுகளை அளிக்கும். கடக ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். நம்பிக்கை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இந்த ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் வெற்றியைப் பெறலாம். 

6 /9

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு உதயம் அதிக அளவில் நன்மை பயக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். மேலும், உங்கள் வருமானமும் உயர வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கைகூடும். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதை இப்போது செய்யலாம். இந்த காலகட்டத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. தொழிலதிபர்களும் இந்த காலகட்டத்தில் பெரிய மற்றும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

7 /9

விருச்சிகம்: குரு உதயமாகும்போது, விருச்சிக ராசிக்காரர்கள் குருவின் நேரடி தாக்கத்தில் இருப்பார்கள். இதன் காரணமாக திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் லட்சியங்கள் நிறைவேறும். அதுமட்டுமல்லாமல் திருமணமான விருச்சிக ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

8 /9

குரு பகவானின் அருள் பெற,  'குரவே சர்வ லோகானாம், பிஷஜே பவ ரோகினாம் நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!'   என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.