Pottasium for Heart Health: பொட்டாசியம் இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய துடிப்பை சீராக்கும் பொட்டாஷியம், இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. உடலுக்கு மிக முக்கியமான கனிமமான பொட்டாஷியம் நரம்புகளின் செயல்பாட்டை சரியாக பராமரிப்பதோடு, அதனை மேலும் சீராக்க உதவுகிறது.
பொட்டாசியம் இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவாக இருந்தால், இதன் காரணமாக இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாகி, வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். உடலில் பொட்டாசியம் சத்து குறைபாடு தீவிரமாக இருந்தால், அந்த குறைப்பாடு மருத்துவத்தில் ஹைபோகாலேமியா என்று அழைக்கப்படுகிறது. எனவே உணவில் பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பது அவசியம்.
வாழைப்பழம்: அதிக பொட்டாசியம் உள்ள பழம் வாழைப்பழம் . ஒரு நடுத்தர அளவு வாழை பழத்தில் 400 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.
உருளைக்கிழங்கு: வேகவைத்த உருளைக்கிழங்கில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஒரு நடுத்தர உருளைக்கிழங்கு 900 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது தவிர கூடுதல் கனிமங்கள் மற்றும் வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகியவற்றின் ஆதாரமாக உள்ளது.
பால் பொருட்கள்: பால், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஒரு கப் பாலில் 375 மி.கி பொட்டாசியம் உள்ளது. எனினும் குறிந்த் கொழுப்பு உள்ள பலை தேர்வு செய்வது நல்லது
சால்மன் மீன்: 154 கிராம் சமைத்த சால்மன் மீனில் இருந்து 780 மி.கி பொட்டாசியம் கிடைக்கும். இந்த மீனில் புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை உங்கள் இதயத்திற்கு நல்லது. (பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். ஜீ மீடியோ இதற்கு பொறுப்பேற்காது)
Next Gallery