இன்னும் 63 நாட்கள் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

ஆகஸ்ட் 10 அன்று, செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்குள் நுழைந்தது. பொதுவாக ஒரு ராசியில் அதிகபட்சமாக 45 நாட்கள் இருக்கும் செவ்வாய், இம்முறை 68 நாட்கள் அதே ராசியில் இருக்க வாய்ப்புள்ளது. அதாவது அக்டோபர் 16 வரை செவ்வாய் ரிஷப ராசியில் இருப்பார். ரிஷப ராசியில் செவ்வாயின் வருகையால் அங்காராக யோகம் எனும் அசுப யோகத்தின் பலன்கள் நீங்கி விட்டன. பொதுவாக எந்த கிரகம் தனது ராசியை மாற்றினாலும், அதன் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். செவ்வாயின் ராசி மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், குறிப்பிட்ட ஏழு ராசிகளில் அதிகப்படியான மாற்றம் இருக்கும். செவ்வாயின் ராசி மாற்றத்தால், 7 ராசிகளில் அதிர்ஷ்டம் தலைகீழாக மாற வாய்ப்புள்ளது. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /7

ரிஷபம்: செவ்வாய் ரிஷப ராசியின் லக்ன பாவத்தில் கோச்சாரம் ஆகியுள்ளார். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் சொத்து வாங்கும் யோகம் உருவாகலாம். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 

2 /7

கடகம்: உங்கள் ராசிக்கு 11 ஆவது வீட்டில் செவ்வாய் கோச்சாரம் செய்துள்ளார். இது உங்கள் ராசிக்கு நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.

3 /7

சிம்மம்: சிம்ம ராசிக்கு 10 ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பது சிம்ம ராசிக்காரர்களின் அனைத்து வேலைகளிலும் வெற்றியைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் வியாபாரம் விரிவடையும். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். பண வரவுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.   

4 /7

கன்னி: செவ்வாய் கன்னி ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக திடீரென்று பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும், உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். அம்மாவின் ஆதரவு கிடைக்கும்.

5 /7

தனுசு: தனுசு ராசியின் ஆறாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பது நன்மை தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகளை வெற்றி பெறலாம். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கலவையான பலன்களைப் பெறுவீர்கள்.

6 /7

மகரம்: மகர ராசியின் ஐந்தாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நேரம் மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் பதவி உயர்வு பெறலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.

7 /7

மீனம்: மீனத்தின் மூன்றாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பது நன்மை தரும். மீன ராசிக்காரர்களுக்கு உடல்நிலை நன்றாக இருக்கும். இந்த காலத்தில் உங்கள் பலம் அதிகரிக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும்.