நோய்களை குணப்படுத்தும் அற்புத மூலிகை பொன்னாங்கண்ணி! "கீரைகளின் ராணி"

Healthy Food: இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ள பொன்னாங்கண்ணி கீரை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகையும் மேம்படுத்தி பேரழகாக்கும் தன்மை கொண்டது.

"கீரைகளின் ராணி" பொன்னாங்கண்ணியின் அற்புதமான பலன்கள் தெரிந்தால் அதை விட யாரும் விரும்பமாட்டார்கள்...

1 /7

கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய பொன்னாங்கண்ணி கீரை, வயிற்று புண், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. இதனால் தான் பொன்னாங்கண்ணிக் கீரையை கீரைகளின் ராணி என்று அழைக்கின்றனர்

2 /7

பொன்னாங்கண்ணிக் கீரையில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உண்டு. சிவப்பு பொன்னாங்காணி என்ற மற்றொரு இனமும் உண்டு 

3 /7

குடலில் ஏற்படும் சீர்கேடுகளை விரைந்து ஆற்றும் திறன் கொண்ட பொன்னாங்கண்ணி, மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. செரிமாண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. 

4 /7

பொன்னாங்கண்ணிக் கீரையில் இருக்கும் விட்டமின் ஏ, கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்பார்வையை மேம்படுத்துகிறது. இது, விழித்திரை நோய், கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி ஒற்றை தலைவலி போன்றவற்றையும் நீக்கும். 

5 /7

பொன்னாய் உடலை மாற்றும் பொன்னாங்கண்ணி என்று சொல்வதில் இருந்து இந்த கீரையின் பல்வேறு நன்மைகளை தெரிந்துக் கொள்ளலாம்

6 /7

பொன்னைப் போல சருமத்தை பளபளப்பாக்கும் கீரை இது, இந்தக் கீரையின் பெயரே, பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங்கண்ணி, என்பது குறிப்பிடத்தக்கது

7 /7

இந்த கீரையை தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தருவதால், தாய்ப்பால் சுரப்பு மேம்படும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்