வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் மெசேஜ்களை மூன்றாம் தரப்பு செயலியை பயன்படுத்தி நாளைக்கு அனுப்ப வேண்டிய மெசேஜ்களை ஷெட்யூல் செய்யலாம்.

 

1 /8

வாட்ஸ்அப் (WhatsApp) இல் டக்டக்கென்று மெசேஜ்களை உடனே அனுப்பிவிடுகிறோம். ஆனால், நாளை நீங்கள் அனுப்ப வேண்டிய ஒரு மெசேஜ்ஜை இன்றே வாட்ஸ்அப்பில் எப்படி ஷெட்யூல் செய்து வைப்பதென்ற ட்ரிக்கை (WhatsApp Schedule Message Tricks) தெரிந்து கொள்வோம்.  

2 /8

வாட்ஸ்அப் (WhatsApp) பயன்பாட்டை உலகம் முழுக்க சுமார் 2 பில்லியன் பயனர்களுக்கு மேல் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த உலகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் டெக்ஸ்டிங் ஆப்ஸ் (texting apps) ஆக வாட்ஸ்அப் திகழ்கிறது. வாட்ஸ்அப் அதன் பயனர்களின் மெசேஜ்ஜிங் பிளாட்ஃபார்ம் (messaging platform) அனுபவத்தை மேம்படுத்த பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.  

3 /8

இருப்பினும், வாட்ஸ்அப் பயனர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்பை நிறுவனம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றே தான் நாம் கூறவேண்டும். காரணம், வாட்ஸ்அப் இன்னும் சில எளிமையான அம்சங்களை வழங்க தவறி வருகிறது. அதில் ஒன்று தான் மெசேஜ்களை ஷெட்யூல் (WhatsApp schedule message) செய்யும் வசதி. வாட்ஸ்அப் இதற்கான ஒரு அதிகாரப்பூர்வ அம்சத்தை அதன் தளத்தில் கொண்டிருக்கவில்லை.  

4 /8

இருப்பினும், மூன்றாம் தரப்பு செயலிகளை (third party mobile apps) பயன்படுத்தி நம்மால் எளிமையாக வாட்ஸ்அப் தளத்தில் மெசேஜ்களை நேரம் மற்றும் நாள் (time and date) போன்ற தகவலை உள்ளிட்டு மெசேஜ்களை ஷெட்யூல் (message schedule) செய்துகொள்ள முடியும். இதை சரியாக செய்வதர்காக நாம் இன்று SKEDit என்ற ஆப்ஸை பயன்படுத்த போகிறோம்.  

5 /8

இந்த ஆப்ஸ் இப்போது கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக இன்ஸ்டால் செய்ய கிடைக்கிறது. வாட்ஸ்அப் மூலம் மெசேஜ்களை ஷெட்யூல் செய்ய, நீங்கள் முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு (android) ஸ்மார்ட்போனில் (smartphone) இந்த SKEDit ஆப்ஸை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அடுத்தபடியாக இந்த SKEDit ஆப்ஸை ஓபன் செய்து, லாகின் (login) செய்ய வேண்டும்.  

6 /8

இதற்கு நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் (Facebook) கணக்கை கூட பயன்படுத்தலாம். லாகின் ஐடி மற்றும் லாகின் பாஸ்வோர்ட் தகவலை உள்ளிட்ட வேண்டும். அதன் பிறகு, வாட்ஸ்அப் ஆப்ஸை கிளிக் செய்து, SKEDit ஆப்ஸ் கோரும் அனுமதிகளை நீங்கள் அனுமதிக்க வேண்டும். அனுமதியை (App permission) வழங்கிய பிறகு, நீங்கள் யாருக்கு ஷெட்யூல் மெசேஜ் அனுப்ப விரும்புகிறீர்களோ அந்த நபரின் பெயரை தேர்வு செய்து, மெசேஜ்ஜை டைப் செய்துகொள்ளுங்கள்.  

7 /8

சென்ட் (Send) பட்டனை கிளிக் செய்யவதற்கு முன்னால், எந்த நாளில் என்ன நேரத்தில் இந்த மெசேஜ் அனுப்பப்பட வேண்டும் என்று உங்களிடம் கேட்கப்படும். நேரம் மற்றும் தேதி போன்ற தகவலை சரியாக உள்ளிட்டு உங்கள் விருப்பத்தை பதிவு செய்யுங்கள். அவ்வளவு தான். நீங்கள் செலக்ட் செய்த அந்த சரியான நேரத்தில், அந்த நபருக்கு வாட்ஸ்அப் மெசேஜ் செட்யூல் (WhatsApp message schedule) செய்யப்பட்டு, சரியான நேரத்தில் டெலிவரியும் செய்யப்படும்.  

8 /8

இந்த முறையை பின்பற்றி, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் எளிமையாக வாட்ஸ்அப் தாளத்தில் இருந்து மெசேஜ்களை ஷெட்யூல் செய்துகொள்ளலாம். ஐபோன் (iPhone) மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்ஜை ஷெட்யூல் செய்வது சுலபமான காரியமில்லை. காரணம் ஐபோன் பல அடுக்கு பாதுகாப்பை கொண்டுள்ளது. இருப்பினும், சிரி (Siri) வாய்ஸ் அஸ்சிஸ்டன்டை பயன்படுத்தி வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்ப முடியும்.