சக்திவாய்ந்த எஞ்சின் பவர் மற்றும் 3 டிரைவ் வசதியுடன் பொலாரிஸ் RZR

Polaris RZR Pro R Sport ATV: சக்திவாய்ந்த எஞ்சின் பவர் மற்றும் 3 டிரைவ் வசதியுடன் பொலாரிஸ் RZR கார் அறிமுகம்

பொலாரிஸ் நிறுவனம்,  RZR Pro R Sport என்ற 4-வீல் டிரைவ் ATVயை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட ஆஃப்-ஹைவே வாகனம், அதாவது, இது ஆஃப்-ரோடிங்கிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றி தெரிந்து கொள்வோம்...

மேலும் படிக்க | டயரை மாத்த போறிங்களா? நாணய சோதனை ஒருமுறை செஞ்சுருங்க

1 /5

Polaris RZR Pro R ஸ்போர்ட்ஸ் கார் 1,880mm நீளம் மற்றும் 406mm கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.  74 அங்குல அகலம் கொண்ட இந்த வாகனம், ரோல் கேஜ் கொண்டுள்ளது.

2 /5

இந்த ஏடிவியில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது, இது 222 பிஎச்பி ஆற்றலை உருவாக்குகிறது. இந்த எஞ்சின் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது.

3 /5

இந்தக் காரில் 2WD, 4WD மற்றும் 4WD ஆகிய மூன்று டிரைவ் மோடுகளின் விருப்பம் உள்ளது.

4 /5

பொலாரிஸ் RZR Pro R Sport அறிமுகத்துடன் முதல் கார் வழங்கப்பட்டது 

5 /5

Polaris RZR Pro R Sport ரூ.59 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.