வடகிழக்கு பிராந்தியத்திற்கு மத்திய அரசின் பரிசு! அருணாச்சல்பிரதேச பசுமை விமானநிலையம்

Greenfield Airport Arunachal Pradesh: அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்...

அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கெனவே இரண்டு விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அம்மாநிலத் தலைநகர் இடாநகரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மறுசூழற்சிப் பயன்பாடு என முற்றிலும் பசுமை முறையில் புதிய விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது...

மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன மத்திய அரசு பணியாளர் டெல்லியில் கைது

1 /5

இந்த விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணி 2020 டிசம்பரில் தொடங்கியது

2 /5

டோனி போலோ விமான நிலையம் அருணாச்சல பிரதேசத்திற்கான மூன்றாவது செயல்பாட்டு விமான நிலையமாக இருக்கும், அதில் இருந்து எதிர்காலத்தில் பல பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த விமான நிலையத்தையும் சேர்த்து வடகிழக்கில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும். சுதந்திரத்திற்குப் பிறகு (1947) 2014 வரை இந்த பகுதியில் 9 விமான நிலையங்கள் மட்டுமே கட்டப்பட்டன.

3 /5

வடக்கு-கிழக்கு இணைப்பை அதிகரிப்பதற்கு பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார். இதன் காரணமாக, இந்த பகுதியில் விமான நிலையங்களின் விரைவான வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை வெறும் எட்டு ஆண்டுகளில் வடகிழக்கில் 7 விமான நிலையங்களை மோடி அரசு கட்டியுள்ளது.

4 /5

இந்த விமான நிலையத்துக்கு டோனி போலோ என்று பெயரிடப்பட்டுள்ளது. டோனி என்றால் சூரியன் என்றும் போலோ என்றால் சந்திரன் என்றும் அர்த்தம். 

5 /5

2014 இல் வாரத்திற்கு 852 ஆக இருந்த விமானப் பயணங்கள் 113% அதிகரித்து 2022 இல் வாரத்திற்கு 1817 ஆக அதிகரித்துள்ளது