Pay 0 Tax Advice : சம்பாதிக்கும் வருமானத்தில் வரி கட்டுவதற்கே பணம் இல்லை என்று சொல்பவர்களின் எண்ணிக்கை நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச்சில் அதிகமாக கேட்க முடிகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் வரியே கணிசமான அளவு கட்ட வேண்டியிருக்கிறது என கவலைப்படுபவரா நீங்கள்?
வருமான வரி செலுத்தாமல் சம்பளத்தை முழுவதுமாக சேமிக்க உதவும் திட்டங்களில் முக்கியமானது தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme)...
வருமான வரி என்பது வருவாயின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்றாலும், பல்வேறு விதங்களில் வருமானத்தை சேகரித்தால், வரி சேமிப்புக்கான திட்டமிடல் வெற்றிகரமாக இருக்கும். இதற்காக எப்போது, ஒரு நிதியாண்டின் தொடக்கத்திலேயே திட்டமிடுவது நல்லது
வருமானத்தை பாதுகாப்பாக சேமித்து வரியை மிச்சப்படுத்த சரியான முதலீடு அவசியம். அதில் தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பிஎஸ் திட்டத்தின் மூலம் ஐம்பதாயிரம் ரூபாய் வரை சேர்க்கலாம்
வருமான வரியின் 80CCD பிரிவில் இரண்டு துணைப் பிரிவுகளான 80CCD(1) மற்றும் 80CCD(2) தவிர, 80CCD(1) 80CCD(1B) இன் மற்றொரு துணைப் பிரிவு உள்ளது. 80சிசிடி(1)ன் கீழ் ரூ.1.5 லட்சமும், 80சிசிடி(1பி) கீழ் ரூ.50 ஆயிரமும் வரிவிலக்கு பெறலாம். இந்த விலக்கு ரூ.2 லட்சத்தைத் தவிர, 80சிசிடி(2)ன் கீழ் வருமான வரி விலக்கும் கிடைக்கும்
உங்கள் என்பிஎஸ் முதலீட்டில் வரி விலக்கு முதலாளியால் கோரப்படுகிறது. அடிப்படை சம்பளம் &அகவிலைப்படியில் 10 சதவீதத்தை NPS இல், உங்கள் முதலாளி முதலீடு செய்யலாம்.
மத்திய அரசு ஊழியர்கள், 14 சதவீதம் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து வரிவிலக்கு பெறலாம் என்றால், பெரும்பாலான நிறுவனங்கள் NPS வசதியை வழங்குகின்றன. இதில் கூடுதல் வரிவிலக்கு கிடைக்கிறது.
வரி கணக்கீடு: ஊழியரின் சம்பளம் 10 லட்சம் 10 லட்ச ரூபாயில் 80சி ரூ.1.5 லட்சம் 80சிசிடி(1பி) ரூ.50 ஆயிரம் நிலையான வருமான வரி விலக்கு ரூ.50 ஆயிரம் மொத்தம் 2.50 லட்சம் ரூபாய் கழித்த பிறக்கு வரிவிதிப்பு வருமானம் ரூ.7.50 லட்சமாக குறையும். சீருடை அலவன்ஸ், பிராட்பேண்ட் அலவன்ஸ், கன்வேயன்ஸ் அலவன்ஸ், பொழுதுபோக்கு போன்ற வகையறாக்களின் மூலம் ரூ.2.50 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம். இதன்பிறகு வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ. 5 லட்சமாக குறைந்தால், நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி பூஜ்ஜியமாகிவிடும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது