Navagrahams Transits Reality : ஜோதிடக் கலையின் அடிப்படையான கோள்களான நவக்கிரகங்கள், தங்கள் இயக்கத்தின்போது ராசி, நட்சத்திரம் என பல்வேறு மாறுதல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் ராசிபலன்கள் கணிக்கப்படுகின்றன
பொதுவாக தெரிந்துக் கொள்வதை விட, நவகிரகங்களின் உண்மையான பெயர்ச்சிக் காலங்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துக் கொள்வது அவசியம்... இந்த முக்கியமான அடிப்படை விஷயத்தைத் தெரிந்துக் கொள்வோம்...
கிரகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வேகத்தில் பயணிக்கின்றன. எந்தவொரு கிரகமாக இருந்தாலும், அவை அடுத்த ராசிக்கு பெயர்ச்சிக்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே அதன் பலன்கள் தொடங்கிவிடும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன இது பற்றிய தகவல் உங்களுக்குத் தெரியுமா?
சுக்கிரன், ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியடைவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே பலன்களை கொடுக்கத் தொடங்கிவிடும்
சூரியன், ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியடைவதற்கு 5நாட்களுக்கு முன்னதாகவே பலன்களை கொடுக்கத் தொடங்கிவிடும்
ராகு கேது கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலன்களை கொடுக்கத் தொடங்கிவிடுகின்றன
புதன், ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியடைவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாகவே பலன்களை கொடுக்கத் தொடங்கிவிடும்
செவ்வாய் கிரகம் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியடைவதற்கு 8 நாட்களுக்கு முன்னதாகவே பலன்களை கொடுக்கத் தொடங்கிவிடும்
குரு, ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பலன்களை கொடுக்கத் தொடங்கிவிடும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது