ஜம்மு காஷ்மீர் ஏன் பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது? புகைப்படங்கள் சொல்லும் பதில்

இயற்கையின் கொடைகளில் பிரதானமானது என்றும், பூமியின் சொர்க்கம் என்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் புகழப்படுகிறது.

பனிமலையின் அழகான சமவெளிகளைப் பார்த்தால் அது பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுவதில் தவறேதும் இல்லை என்று புரியும். நேரில் செல்ல நேரமாகுமே? புகைப்படங்களில் பூமியின் சொர்க்கத்தை பாருங்கள்....

1 /5

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 90% க்கும் அதிகமான பகுதி மலைப்பாங்கான பகுதி. இங்கு 80% மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள்

2 /5

பூலோகத்தில் சொர்க்கம் குல்மார்க் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலம். அதன் அழகு காரணமாக, இது பூமியின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

3 /5

குல்மார்க் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் குளிர்காலத்தில் மைனஸ் 15 டிகிரிக்கு கீழே தட்ப நிலை சென்றுவிடும். அப்போது அப்பகுதி முழுவதும் பனி மட்டுமே தெரியும். வெண்பனியால் சூழப்பட்ட சொர்க்கம் மட்டுமே அங்கு தெரியும்  

4 /5

கோல்ஃப் மைதானம் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, ​​1904-ம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் கோல்ஃப் விளையாடுவதற்காக இங்கு கோல்ஃப் மைதானத்தை அமைத்தனர்.

5 /5

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் தனது விடுமுறையைக் கழிக்க அடிக்கடி குல்மார்க்கிற்கு வருவார். ஜஹாங்கீர் இங்கு 21 வகையான பூக்களைக் கொண்ட தோட்டத்தை அமைத்திருந்தார்