தக்காளி, சாம்பார், ரசம், சாலட்கள், தொக்கு, ஜாம் என பலவித உணவு வகைகளை செய்ய பயன்படுகிறது. வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே, லைகோபீன் மற்றும் ஆண்டியாக்சிடெண்டுகள் நிறைந்த தக்காளி பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
தக்காளி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. ஆனால் தக்காளி புளிப்பு என்பதால், அதிகமான தக்காளியை சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தக்காளியில் அதிக ஆக்சலேட் மற்றும் கால்சியம் இருக்கின்றன. இவை உடலில் ஒன்றாகக் குவியும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே தக்காளியை குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.
தக்காளி மூட்டு வலி மற்றும் வீக்கத்தின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. தக்காளியில் உள்ள ஒரு கலவையால், திசுக்களில் கால்சியம் குவியத் தொடங்குகிறது. வீக்கம் காரணமாக, மூட்டு வலி பிரச்சினை ஏற்படுகிறது.
அதிக தக்காளியை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம் தக்காளியில் ஹிஸ்டமைன் எனப்படும் ஒரு கலவை இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வாமை ஆபத்து ஏற்படலாம். சிலருக்கு அதிகமாக தக்காளியை சாப்பிடுவதால், இருமல், தும்மல், அரிக்கும் தோலழற்சி, தோல் வெடிப்பு, தொண்டை அரிப்பு, முகத்தில் வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தக்காளி மாலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் இரண்டையும் கொண்டுள்ளது. எனவே அதிகமாக தக்காளி சாப்பிடுவது மார்பு எரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸை (ஆசிட் ரிஃப்ளக்ஸ்) ஏற்படுத்தும்.
சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்டிருக்கும் பல தக்காளிகளும் உள்ளன. இதன் காரணமாக வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் சிலருக்கு உண்டாகக்கூடும். தக்காளியால் சிலருக்கு வயிற்று பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படக்கூடும். ஆகையால் அத்தகையவர்கள் தக்காளியை அளவோடு உட்கொள்வது நல்லது. (குறிப்பு: எந்தவொரு தீர்வையும் எடுப்பதற்கு முன்பு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும். இந்த தகவலுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.)