ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வர்த்தகர்களுக்கு தங்கக் கடன்களை மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கி வருகிறது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த தங்கக் கடன் மிக எளிதாகக் கிடைக்கும்.
இதனால் நீங்கள் உங்கள் வணிகத்தையும் அதிகரித்துக்கொள்ள முடியும். அதோடு உங்கள் தனிப்பட்ட தேவைகளும் பூர்த்தியாகும். எஸ்பிஐயின் இந்த சிறப்பு சலுகையின் கீழ், வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் இருப்புநிலைக் குறிப்பைக் (balance sheet) காட்ட வேண்டிய அவசியமுமில்லை.
SBI-யின் இந்த தங்க கடன் சலுகை வர்த்தகர்களுக்கு மட்டுமே. இந்த சலுகையின் கீழ், 1 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம். SBI-யின் இந்த சலுகையின் மூலம், வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.
SBI-யின் இந்த சிறப்பு தங்க கடன் சலுகை 7.25 சதவீதம் என்ற ஆண்டு வட்டி விகிதத்திலேயே கிடைக்கிறது. இதை இந்த வகையில் புரிந்துகொள்ளலாம். நீங்கள் ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் தங்கக் கடனை எடுத்தால், இதற்கான வட்டியாக 7,250 ரூபாயை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
பொதுவாக, வர்த்தகர்கள் எந்தவிதமான கடனை வாங்குவதற்கும் பாலன்ஸ் ஷீட்டைக் காட்ட வேண்டி இருக்கும். ஆனால் SBI-யின் இந்த சிறப்பு சலுகையில் இருப்புநிலைக் குறிப்பைக் (Balance Sheet) காட்ட வேண்டிய அவசியமில்லை. உங்கள் தங்கத்தை அடகு வைத்து நீங்கள் கடன் வாங்க முடியும்.
SBI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அகௌண்டில் சிறப்பு தங்க கடன் சலுகை பற்றிய தகவல்களை வழங்கியுள்ளது. SBI, தனது வாடிக்கையாளர்கள் தங்களது அருகிலுள்ள கிளைக்குச் சென்று இந்த சிறப்பு தங்கக் கடன் சலுகை குறித்த முழுமையான தகவல்களைப் பெறலாம் என்று கூறியுள்ளது. கடனைப் பெறுவதற்கான முழு செயல்முறையும் மிகவும் எளிதானது. மேலும் அது கடன் வாங்கும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் SBI கூறுகிறது.