வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்... சிரித்தால் என்ன செலவா ஆகும்!!!

சிரிப்பு என்பது புன்சிரிப்பாகவும் இருக்கலாம், வன்சிரிப்பாகவோ மென்சிரிப்பாகவோ ஏன் நம்பியார் சிரிப்பாகவோக் கூட இருக்கலாம். ஆனால் சிரிப்பு என்னும் பூ மலர்ந்து அது மகிழ்ச்சியாக விரியும் தருணங்கள் உங்களுக்காக...

மகிழ்ச்சி இது சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்பட டயலாக் அல்ல. இது தான் வாழ்வின் முக்கியமான அம்சம்... வாழ்க்கையில் சிரித்து வாழும் தருணங்களே உண்மையில் நாம் உயிர்த்திருக்கும் தருணங்கள்... தாங்கள் அனுபவித்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து உங்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் மகிழ்வான மனிதர்களின் புகைப்படத் தொகுப்பு...  

இந்த புகைப்படங்கள் அனைத்தும் Unsplash வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச புகைப்படங்கள். இந்த வலைதளத்தில் புகைப்படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். 

Photos Curtosy: Unsplash Website

1 /12

மலர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சிப் பூவாய் பூத்துக் குலுங்கும் பூவை இவள் யாரோ? மலர்களே மலர்களே இது என்ன கனவா? என்ற பாடலை அனுபவிக்கிறாரோ?

2 /12

பனி உறைந்த மலை உச்சிக்கு சென்றால் சொர்க்கத்திற்கு அருகில் சென்று விடுவோமா என்ன? அறிவியல் என்ன சொல்கிறது என தெரியவில்லை.  ஆனால், இந்த பெண்ணின் மகிழ்ச்சி ஆம் என்கிறது... நீல வானிற்கும், வெண் பனிக்கும் இடையில் சந்தோசத் துள்ளல்...

3 /12

வானுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்பும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு...

4 /12

தண்ணீருக்குள் மிதந்தாலும் மகிழ்ச்சி தான். அந்த அலாதி மகிழ்ச்சியை நீந்தி அனுபவித்தால் தான் புரிந்துக் கொள்ள முடியுமா என்ன? இந்த புகைப்படத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்தாலே போதும்...

5 /12

இதைப் பார்த்தால் சந்திரமுகி திரைப்படமும், வடிவேலுவும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை....

6 /12

பால்ய வயதின் மகிழ்ச்சிக்கு ஈடும் இல்லை, இணையும் இல்லை...

7 /12

அத்துவானக் காட்டிற்குள் தனிமையில் இருந்தாலும் மகிழ்ச்சிக்கு ஏது குறை? வனதேவதையின் மடியில் இருக்கும் போது குறையொன்றும் இல்லை...

8 /12

காதலியின் எடையும் பூப்போல இருக்கிறதோ என்னவோ? இல்லாவிட்டால் எடையை தூக்கினால் முகத்தில் எள்ளும் கொள்ளும் தானே வெடிக்கும்? மகிழ்ச்சி என்பது மனதில் தான் உடல் பளுவிலோ, வேலைப் பளுவிலோ இல்லை என்பதை உணர்த்தும் காதலர்கள்...

9 /12

ஏழ்மையிலும் வளமையான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பது சிரிப்பும், மகிழ்ச்சியும். செல்வத்துக்கு பஞ்சமிருந்தாலும், இந்த குட்டிச் செல்லத்தின் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. இதை உணர்த்துகிறதோ இந்த கருப்பு-வெள்ளை புகைப்படம்?

10 /12

சிரித்து மகிழும் இந்த பருவம் கடந்த அனைவரும், மீண்டும் இப்பருவம் வாய்க்காதோ என்று ஏங்காமல் இருப்பதில்லை...

11 /12

தனியாக இருந்தாலும் நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமில்லை. வஞ்சமில்லா இதயம் எங்கிருந்தாலும் மகிழ்வுடன் இருக்கும்...

12 /12

கையில் மத்தாப்பூ, வாயில் சிரிப்பு, மனதில் மகிழ்ச்சிப்பூ...