Digital voter ID card download: ஜனவரி 25 ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இதை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஜனவரி 25 ஆம் தேதி தொடக்கி வைத்தார்.
வாக்காளர் அடையாள அட்டை செயல்முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், இப்போது நீங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டைப் போலவே உங்கள் வாக்காளர் அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக, நாடு முழுவதும் தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை வசதியை ECI தொடங்கியுள்ளது. இதை டிஜிட்டல் வடிவத்தில் டிஜி லாக்கரிலும் சேமிக்க முடியும். Source: PTI
ஜனவரி 25-31 வரையிலான முதல் கட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து, தங்கள் மொபைல் எண்களை படிவம் -6 இல் பதிவு செய்த புதிய வாக்காளர்கள், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிப்பான e-EPIC –ஐ பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தங்கள் மொபைல் எண்ணை அங்கீகரித்து அவர்கள் இதை செய்துகொண்டார்கள். Source: PTI
பிப்ரவரி 1 முதல், டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை அனைவருக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது.
e-EPIC என்பது EPIC இன் திருத்த முடியாத பாதுகாப்பான போர்ட்டபிள் ஆவண வடிவமைப்பு (PDF) பதிப்பாகும். இதில் புகைப்படம் மற்றும் சீரியல் எண், பகுதி எண் போன்ற புள்ளிவிவரங்களுடன் பாதுகாப்பான QR குறியீடும் இருக்கும். EPIC ஐ மொபைல் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் டிஜிட்டல் முறையில் இதை சேமிக்க முடியும். இப்போது ECI இன் அறிவிப்பின்படி, பொது வாக்காளர்களும் e-EPIC க்கு விண்ணப்பிக்கலாம். Source: PTI
Step 1: voterportal.eci.gov.in. என்ற இணைப்பிற்கு செல்லவும். தேவையான விவரங்களை உள்ளிட்டு ஒரு கணக்கை உருவாக்கவும். மாற்றாக, தேசிய வாக்காளர் சேவைகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான vnvsp.in –க்கு சென்றும் அங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம். Step 2: இப்போது, உங்கள் கணக்கில் லாக் இன் செய்து, “Download e-EPIC” மெனுவுக்குச் செல்லவும். Step 3: உங்கள் e-EPIC எண்ணை உள்ளிடவும். நீங்கள் குறிப்பிட்ட எண்ணை உள்ளிட்டவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். Step 4: இங்கே நீங்கள் "Download EPIC”என்ற ஆப்ஷனைப் பெறுவீர்கள். Download பட்டனை கிளிக் செய்யும் முன்னர் நீங்கள் KYC பயிற்சியை முடித்துவிட்டீர்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் மொபைல் எண் மாறியிருந்தால் அதை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். Step 5: நீங்கள் KYC செயல்முறையை முடித்ததும், உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை PDF வடிவத்தில் பதிவிறக்குவது நல்லது. நீங்கள் PDF கோப்பில் ஒரு QR குறியீட்டைக் காண்பீர்கள். மேலும் அந்தப் படத்தை ஸ்கேன் செய்தால், உங்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்க்கலாம். Source: Reuters
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர் மொபைல் செயலியிலிருந்தும் உருவாக்கலாம். இதை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். Source: PTI