Smart TV-யில் ரூ.7500 உடனடி தள்ளுபடி: எந்த டிவி? தள்ளுபடி எப்படி பெறுவது? இங்கே காணலாம்!

Mi QLED TV 75 Discount Offer: நீங்கள் ஸ்மார்ட் டி.வி வாங்க திட்டமிட்டுக்கொண்டிருந்தால், உங்களுக்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. 7500 ரூபாய் வரையிலான உடனடி தள்ளுபடியுடன் இப்போது மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்மார்ட் டிவியை வாங்க ஒரு அருமையான வாய்ப்பு வந்துள்ளது. 

சீன மின்னணு நிறுவனமான சியோமி வெள்ளிக்கிழமை, தனித்துவமான Mi QLED TV 75 யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிவி வாங்கும்போது இந்த தள்ளுபடியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

1 /4

Xiaomi TV Mi QLED TV 75 இன் ஸ்க்ரீன் அளவு 75 அங்குலங்கள். மேலும், இந்த டிவி 97 சதவீதம் ஸ்க்ரீன்-டு-பாடி விகிதத்துடன் வருகிறது. இது 1,19,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டி-வி ஏப்ரல் 27 முதல் டிவி மீ.காம், மீ ஹோம் மற்றும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும்.

2 /4

Xiaomi TV Mi QLED TV 75 இல் Google அசிஸ்டெண்ட் மற்றும் Chromecast ஆகிய அம்சங்கள் உள்ளன. இது பயனருக்கு சிறப்பான அனுபவத்தை அளிக்கிறது. டிவியில் மாலி ஜி 52 எம்பி 2 கிராபிக்ஸ் மற்றும் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளன. கூடுதலாக, இந்த டிவி 64 பிட் குவாட்கோர் ஏ 55 பிராசசரால் இயங்குகிறது.

3 /4

இந்த டிவி-யில் ஆண்ட்ராய்டு இயக்கம் உள்ளது. இது Google Play Store-ல் கிடைக்கும் 5000 க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்கள் இயங்க சப்போர்ட் செய்கிறது. இவற்றில், Netflix, Amazon Video, Disney Plus Hotstar போன்ற பிரபலமான செயலிகளும் அடங்கும். 

4 /4

இந்த டிவியை HDFC வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனை ஆப்ஷனில் வாங்கினால், ரூ .7500 வரையிலான உடனடி தள்ளுபடி கிடைக்கும்.