தீபாவளிக்கு முன் இந்த நாளில், இந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள்... செல்வம் பெருகும் என்பது ஐதீகம்!

Diwali 2024, Dhanteras: தீபாவளி பண்டிகைக்கு முன்னர் தங்கம், வெள்ளி வாங்க நினைப்பவர்களுக்கு, அதற்கான நல்ல நேரம் என்ன என்பதை இங்கு காணலாம். 

தந்தேராஸ் என்பது ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் கொண்டாடும் திருநாளாகும். இந்த தினத்தில் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கினால் செல்வம் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

 

1 /8

தீபாவளி பண்டிகை (Diwali 2024) இந்தாண்டு அக். 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேராஸ் பண்டிகையும் கொண்டாடப்படும்.  

2 /8

இந்து மத நம்பிக்கையின்படி, ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் கொண்டாடும் திருநாளாக தந்தேராஸ் பண்டிகை (Dhanteras) உள்ளது. இந்த பண்டிகையின் போது தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கினால் நல்லது என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.   

3 /8

விஷ்ணு பகவானின் அவதாரங்களில் ஒன்றான தன்வந்திரியை இந்த தினத்தில் பக்தர்கள் வழிபடுவார்கள். தன்வந்திரி ஆயுர்வேதத்தின் கடவுளாகவும் அறியப்படுகிறார்.    

4 /8

விஷ்ணு பாற்கடலை கடைந்த போது அமிர்த கலசத்தில் இருந்து தன்வந்திரி தோன்றியது. இதுவே தந்தேராஸின் மூலத்தை குறிக்கிறது.

5 /8

மேலும் குறிப்பாக லஷ்மி மற்றும் பகவான் நாராயணன் ஆகியோரை இந்த தினத்தில் வழிபட்டால் நன்மை உண்டாகும்.   

6 /8

மகாலட்சுமி வாழ்க்கை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அளிக்க இந்த தினத்தில் தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்களை மக்கள் வாங்குவார்கள்.    

7 /8

அந்த வகையில் தந்தேராஸ் அன்று தங்கம், வெள்ளி வாங்க முகூர்த்த நேரமும் உள்ளது. அதாவது, அக். 29ஆம் தேதி காலை 10.31 மணி முதல் அக். 30ஆம் தேதி மதியம் 1.15 மணிவரை மூகூர்த்த நேரமாகும்.   

8 /8

அதிலும் முக்கிய சிறந்த முகூர்த்த நேரத்தை கேட்பவர்கள், அக்டோபர் 29ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிமுதல் காலை 2.45 மணிவரை என கூறப்படுகிறது.