சில வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் பணம் வைக்கக்கூடாத 3 இடங்களைக் கூறுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பணம் வைக்க இடம் இருக்கிறதா என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு இது ஒரு சிறந்த பதிலாக அமைகிறது. மேலும் இந்த 3 இடங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.
எதற்காக வீட்டில் நாம் தெய்வங்களுக்காகத் தனி இடம் ஒதுக்குகின்றோம் என்று அனைவருக்கும் தெரியும். பணமும் தெய்வத்திற்குச் சமம் என்று பணத்தின் தேவை இருக்கும் போது கடவுளிடம் கேட்கும்போது நாம் அறிவோம். அதுபோன்று வீட்டில் பல்வேறு இடங்களில் சமையலறை, தெய்வம் இருக்கும் இடம் மற்றும் கழிவறை அனைத்தும் இடம் பார்த்து திசைகள் பார்த்து அமைத்து கட்டிடம் கட்டப்படுகிறது. மேலும் பணம் வைக்கக்கூடாத முக்கிய 3 இடங்கள் பற்றி இங்குத் தெரிந்துகொள்வோம்.
நம் முன்னோர்கள் பின்பற்றிய இடத்தை தற்காலத்தில் நிரப்புவது என்பது மிககடினமான டாஸ்க் என்றே சொல்லலாம். அந்த அளவு மக்கள் மாடர்ன் சிட்டிக்கு மாரி விட்டனர்.
பணத்தை நீங்கள் இடம் மாறி வைத்திருந்தால் அதற்கான எதிர்விளைவுகள் நீங்கள் நிச்சயம் வாழ்க்கையில் சந்தித்து இருப்பீர்கள். இனி இந்த எதிர்விளைவு ஏற்படாமல் இருக்க இந்த விஷயத்தைப் பின்பற்றுங்கள்.
வீட்டில் இருட்டான இடத்தில் பணம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். வெளிச்சம் குறைவான இடத்திலும் வைப்பதைத் தவிர்த்துவிடவும். பீரோவில் இருட்டாகத்தான் இருக்கும் என்ற கேள்வி எழும்பலாம். ஆனால் சில கூற்றுப்படி இது சொல்லப்படுகிறது.
இருண்ட இடத்தில் பணம் வைப்பதைப் பாதுகாப்பாக உணரலாம், ஆனால் உங்கள் பண குறைவை அதில் காண்பீர்கள்.
கழிவறை அருகில் ஏதேனும் சுவர் அல்லது அலமாரி இருந்தால் அங்குப் பணம் வைப்பதை இனி செய்யாதீர்கள்.
இந்த கழிவறை எதிர்மறை விளைவுகளைப் பணத்திற்கு ஏற்படுத்தலாம். உடனடியாக அங்கிருந்து பணத்தை வேறு இடத்திற்கு வைத்துவிடவும்.
தெற்கு திசையில் பணத்தை ஒருபோதும் வைக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது.
வாஸ்து சாத்திரத்தின் படி தெற்கு திசையை எதிர்மறை திசையாகக் கருதப்படுகின்றன. அதனால் தெற்கு திசையில் வைப்பதை முற்றிலும் நிறுத்திவிடவும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.