அமாவாசை விரதம் பிடிப்பவர்கள் செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்!

நமது முன்னோர்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு பிடித்த உணவுகளை செய்து வழிபாடு செய்யும் நாளாக அமாவாசை நாள் அமைகிறது.

 

1 /5

அமாவாசை நாளில் வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது, வாசலில் கோலமிடுவது தெய்வத்திற்கு உகந்தது.  எனவே அன்றைய தினம் வாசலில் கோலம் போடாமல் முன்னோர்களை வழிபட்டுவிட்டு அதன் பிறகே தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும்.   

2 /5

அமாவாசை விரதத்தை சுமங்கலிகள் பிடிக்கக்கூடாது, கணவன் உயிருடன் இல்லாத பெண்கள் தான் அமாவாசை விரதம் பிடிக்கவேண்டும்.  மேலும் சுமங்கலிகள் வெறும் வயிற்றோடு அமாவசைக்கு உணவு சமைக்கக்கூடாது.  

3 /5

அமாவசை விரதம் எடுப்பவர்கள் காலை உணவு சாப்பிடக்கூடாது, நம் முன்னோர்களுக்கு பிடித்த உணவை சமைத்து அவர்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு, முதலில் காகத்திற்கு இலையில் சாப்பாட்டை வைத்துவிட்ட பிறகு தான் சாப்பிட வேண்டும்.  

4 /5

அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது, விரதமிருப்பது, காகத்திற்கு உணவு வைப்பது போன்றவற்றோடு அன்றைய தினம் ஒரு நான்கு பேருக்காவது மத்திய உணவளித்து அவர்களின் பசியை ஆற்ற வேண்டும்.  இப்படி செய்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும்.  

5 /5

அமாவசை நாளில் மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி குடும்பத்தினர் அனைவரும் முன்னோர்களை வழிபட வேண்டும்.  மேலும் விரதம் இருந்தவர்கள் இரவில் சாதம் சாப்பிடாமல் அப்போது புதிதாக சமைத்த இட்லி, தோசை போன்ற டிபன் ஐட்டங்களை சாப்பிட வேண்டும்.