சுந்தர் சி படத்தில் பிகினியில் போஸ் கொடுக்கும் இளம் நடிகை பலக் லால்வானி

தலைநகரம் 2வில் நடித்துக் கொண்டிருக்கும் இளம் நடிகையான பலக் லால்வானியின் பிகினி உடை ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

 

 

1 /5

தமிழ் சினிமாவில் அறிமுக நடிகையாக திகழ்பவர் பலக் லால்வானி. இவர் தெலுங்கில் ஜூவா, அப்பயித்தோ அம்மாயி போன்ற சில படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால், அவருக்கு தெலுங்கில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் தமிழுக்கு தாவி விட்டார்.   

2 /5

தமிழில் சகா என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஆனால், அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அந்த படத்தை தொடர்ந்து இவர் குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் குப்பத்து ராஜா. இந்த படத்தை சரவணன் சிராஜ், சரவணன் தயாரித்து இருந்தார்கள்.   

3 /5

மேலும், இந்த படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார், பார்த்திபன், பூனம் பஜ்வா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக பலக் லால்வானி நடித்திருந்தார்.  

4 /5

இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இதை தொடர்ந்து இவர் ஆதி, ஹன்சிகா நடிக்கும் பார்ட்னர் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அதில், ரசிகர்கள் என்னுடைய நடிப்பை பாராட்டும் நாளுக்காக காத்து கொண்டு இருக்கிறேன் என்று அவர் கூறியிருந்தார்.   

5 /5

பின் இந்த படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் தலைநகரம் 2-வில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவருடைய டூ பீஸ் நீச்சலுடை புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. டூ பீஸ் உடையில் நடிகை பலக் லால்வானி பயங்கர கிளாமராக மிரட்டி இருக்கிறார். அதோடு ஜொள்ளு விடுமளவிற்கு அம்மனி பயங்கரமாக போஸ் கொடுத்திருக்கிறார்.