'ஆரஞ்சு அலர்ட்...' எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? 2 நாள்களில் கொட்டப்போகுது கனமழை!

TN Rain Updates: தமிழ்நாட்டின் இரண்டு மாவட்டங்களில் நாளையும் (ஜூன் 25), நாளை மறுநாளும் (ஜூன் 26) கன முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

  • Jun 24, 2024, 15:41 PM IST

இன்றும் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

1 /8

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (ஜூன் 24) பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.      

2 /8

மேலும், நீலகிரி  மற்றும்  கன்னியாகுமரி  மாவட்டங்கள், கோயம்புத்தூர்,  திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

3 /8

தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளையும் (ஜூன் 25), நாளை மறுநாளும் (ஜூன் 26) பெய்யக்கூடும்.

4 /8

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரண்டு மாவட்டங்களுக்கு நாளையும் (ஜூன் 25), நாளை மறுதினமும் (ஜூன் 26) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.   

5 /8

மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும்  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளையும் (ஜூன் 25), நாளை மறுதினமும் (ஜூன் 26) கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.  

6 /8

தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜூன் 27ஆம் தேதி அன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

7 /8

இதையடுத்து ஜூன் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.   

8 /8

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் மாலை / இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.