கோகுலாஷ்டமி: கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிரியமானவை இவை தான்!

ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி கிருஷ்ணரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.  ஜென்மாஷ்டமி நாளில் வழிபடும் போது, ​​கிருஷ்ணருக்கு விருப்பமான பொருட்களைப் படைத்து, சிறப்பு அருள் பெறுங்கள். 

1 /5

கிருஷ்ணருக்கு வெண்ணெய் மற்றும் சர்க்கரை இனிப்புகள் மிகவும் பிடிக்கும். பகவான் கிருஷ்ணர் சிறுவயதில் வெண்ணெய் மற்றும் இனிப்புகளை திருடியதாக பல புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜென்மாஷ்டமி பூஜையில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை சமர்பிக்கவும்.

2 /5

கிருஷ்ணருக்கு மயில் இறகு மிகவும் பிடித்தமானது. அவருடைய கிரீடத்தில் இன்றும் மயில் இறகு உள்ளது. லட்டு கோபாலருக்கு மயில் தோகை அர்ச்சனை செய்வது சிறப்பான பலனைத் தரும் என்பது நம்பிக்கை. ஒரு மயில் இறகு எதிர்மறையை அகற்றும் என்று நம்பப்படுகிறது மற்றும் அதை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நன்மை பயக்கும்.

3 /5

ஜென்மாஷ்டமி நாளில், பூஜையில் அவலில் செய்த இனிப்பு உணவை சேர்க்க வேண்டும். ஏனெனில் கிருஷ்ணருக்கு அவல் மிகவும் பிடிக்கும். 

4 /5

புல்லாங்குழல் என்றால் கிருஷ்ணன் என்றும், கிருஷ்ணன் என்றால் புல்லாங்குழல் என்றும் ஒரு பழமொழி உண்டு. புல்லாங்குழல் பகவான் கிருஷ்ணருக்கு விருப்பமான பொருள். ஜென்மாஷ்டமி பூஜையில் புல்லாங்குழல் வைப்பது சிறப்பு.

5 /5

கிருஷ்ணர் சிறுவயதிலிருந்தே பசுக்களுக்கு சேவை செய்தார். பசுவின் மீது அவருக்கு தனிப் பற்று இருந்தது. எனவே ஜென்மாஷ்டமி பூஜையில் பசுவின் சிலையை வைக்க வேண்டும். இல்லையெனில் பசுவிற்கு பிரசாதம் வழங்க வேண்டும். இப்படி செய்தால் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.