இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனை என்றாலும், சிலருக்கு பல்வேறு வகையில் முயற்சி செய்த போதிலும், உடல் எடை குறையாமல் இருக்கலாம்.
உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பல்வேறு வகையில் முயற்சி செய்த போதிலும், உடல் எடை குறையாமல் இருந்தால், சில பரிசோதனைகளை உடனடியாக செய்வது நல்லது.
உடல் பருமன் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால், கடுமையான முயற்சி செய்த போதிலும் சிலருக்கு உடல் எடை குறையாமல், பாடாய்படுத்தும். இந்நிலையில், உடல் பருமன் சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். அதனால், சில மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்.
உடல் பருமன், இதய நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அதிகமாக இருக்கிறதா என்பதை அறிய லிபிட் ப்ரொபைல் பரிசோதனை செய்து பார்க்கவும்.
தற்போது டீன் ஏஜ் பெண்களின் மத்தியில், மோசமான வாழ்க்கை முறை காரணமாக, PCOS என்னும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ஏற்பட தொடங்கியுள்ளது. இது இருந்தால் உடல் எடை குறையாது. எனவே கண்டிப்பாக பேசிஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உடல் பருமன் குறையாமல் இருப்பதற்கு தைராய்டு பிரச்சனை காரணமாக இருக்கலாம். 40 வயதிற்கு பிறகு தைராய்டு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
உடல் பருமன் குறையாமல் இருந்தால், சர்க்கரை நோய் வந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே, கண்டிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்துப் பார்த்து மருத்துவரை ஆலோசனை செய்யவும்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.