Olympic Games: பாரிஸில் முடிந்தது... அடுத்தடுத்த ஒலிம்பிக்ஸ் எங்கு, எப்போது?

பாரிஸ் சம்மர் ஒலிம்பிக் தொடர் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், அடுத்தடுத்து கோடைக்கால ஒலிம்பிக் தொடர்கள் (Summer Olympics), குளிர்கால ஒலிம்பிக் தொடர்கள் (Winter Olympics) நடைபெற இருக்கிறது என்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.

  • Aug 12, 2024, 18:38 PM IST

கோடைக்கால ஒலிம்பிக் தொடர்களுக்கும், குளிர்கால ஒலிம்பிக் தொடர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் இடைவெளி இருக்கும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் என்பது தனியாக நடைபெறும்.

1 /8

பாரிஸ் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆக. 11 நிறைவடைந்தது. இந்த தொடரில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.   

2 /8

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய சார்பில் துப்பாக்கிச் சூட்டில் 3 வெண்கலம், மல்யுத்தம் மற்றும் ஹாக்கியில் தலா 1 வெண்கலம் மற்றும் ஈட்டி எறிதழில் 1 வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை பெற்று 71ஆவது இடத்தை பிடித்தது. வினேஷ் போகத் வழக்கு விசாரணையும் நிலுவையில் உள்ளது.   

3 /8

கடந்த ஒலிம்பிக் தொடரை விட இந்த முறை இந்தியா குறைவான பதக்கங்களை பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த ஒலிம்பிக் தொடர் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வினேஷ் போகத் விவகாரம் இந்தியாவை ஒலிம்பிக் நோக்கி மேலும் கவனத்தை கொண்டு வந்துள்ளது எனலாம். இந்நிலையில், அடுத்தடுத்த ஒலிம்பிக் தொடர் எங்கு, எப்போது நடைபெறும் என்பது குறித்து இங்கு காணலாம்.   

4 /8

2028 சம்மர் ஒலிம்பிக்ஸ்: முதலில் கோடைக்கால ஒலிம்பிக் தொடர்களை பார்க்கலாம். பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடருக்கு பிறகு 2028ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறும். இந்த ஒலிம்பிக் தொடர் 2028ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.   

5 /8

2032 சம்மர் ஒலிம்பிக்ஸ்: அதன்பின்னர், 2032ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. அந்த தொடர் 2032ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி முதல் ஆக. 8ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இரண்டு சம்மர் ஒலிம்பிக் தொடர்கள் மட்டுமே உறுதியாகி உள்ளது.   

6 /8

குளிர்கால ஒலிம்பிக்ஸ்: 2026ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டின் மிலன்-கார்டினா டி ஆம்பெஸ்ஸோ நகரிலும், 2030ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் பிரான்ஸ் ஆல்ப்ஸ் நகரிலும், 2034ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி நகரிலும் நடைபெறுகின்றன. இவை அனைத்தும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறுகின்றன.  

7 /8

கோடைக்கால பாரா ஒலிம்பிக் தொடர் இம்மாத இறுதியில் நடைபெறுகிறது. ஆக. 28ஆம் தேதி தொடங்கும் பாரா ஒலிம்பிக் தொடர், செப். 8ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த தொடர் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் தொடராகும். இந்த தொடரும் பாரிஸ் நகரிலேயே நடைபெறுகிறது.   

8 /8

இதுவரை ஒலிம்பிக் தொடர்கள் ஆப்பிரிக்காவை தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.