Water Expiry Date : குடிநீர் பாட்டில்களில் வாங்கி குடிப்பவர் என்றால், அதற்கு காலாவதி தேதி இருக்கிறதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Water Expiry Date : பாட்டில் தண்ணீர் வாங்கி குடிப்பது எல்லோரும் செய்யக்கூடிய பொதுவான விஷயம் என்றாலும், அதற்கு காலாவதி தேதி இருக்கிறதா? என்பதை ஒருமுறையாவது யோசித்திருக்கிறோமா?
எப்போது எங்கு சென்றாலும் சுத்தமான தண்ணீரை குடிப்பது அவசியம். ஏனென்றால் குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இருந்தால் தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அதேநேரத்தில் தண்ணீருக்கும் காலாவதி தேதி உள்ளதா என்று மக்கள் அடிக்கடி ஆச்சரியப்படுகிறார்கள்.
இந்த கேள்வியும் உங்கள் மனதில் தோன்றினால், அதற்கான பதிலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குடிக்கும் நீர் குறித்து பல கட்டுக்கதைகள் இருக்கும் நிலையில் அவற்றில் சில அறிவியல் காரணங்களால் உண்மையாகவும், சில யூகங்களாகவும் உள்ளன.
அதற்கு முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, குடிநீருக்கு காலாவதி தேதி எத்தனை நாட்களுக்கு இருக்கும்? தண்ணீர் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு என்ன காரணம்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் முக்கியமானது.
இப்போது தண்ணீர் பாட்டில்கள் எல்லா இடங்களிலும் விற்கப்படுகின்றன. நகரம் முதல் கிராமம் வரை தண்ணீர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. வாங்கி குடிக்கும் தண்ணீர் பாட்டிலில் காலாவதி தேதியும் எழுதப்பட்டுள்ளது.
இருப்பினும் தண்ணீருக்கு காலாவதி தேதி இல்லை என்பது தான் உண்மை. நீர் ஒருபோதும் காலாவதியாகாது, அது அழுக்காகி பின்னர் சுத்தம் செய்யப்படும்.
தண்ணீர் பாட்டில்களில் எழுதப்பட்டிருக்கும் காலாவதி தேதி தண்ணீரின் காலாவதி தேதி அல்ல. எதற்காக தண்ணீர் பாட்டில்களின் காலாவதி தேதி ஒட்டப்பட்டிருக்கிறது என்றால், தண்ணீர் பாட்டில்கள் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. அவை குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அந்த பிளாஸ்டிக் தண்ணீரில் மெதுவாக கரையத் தொடங்குகிறது.
காலப்போக்கில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பாட்டிலுக்குள் செல்லலாம் அல்லது பாட்டிலின் பிளாஸ்டிக் பலவீனமாகலாம். எனவே, பாட்டிலைப் பயன்படுத்துவதற்கு ஒரு வரம்பு உள்ளது. அதனடிப்படையில் தான் காலாவதி தேதியும் நிர்ணயிக்கப்படுகிறது.
நீங்கள் பாட்டில் தண்ணீரைக் குடித்தால், காலாவதி தேதியை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த, பாட்டிலை நன்கு பரிசோதிக்கவும், ஏதேனும் சேதம் தெரிந்தால் குடிக்க வேண்டாம்.