கிரக நிலைகளில் மாற்றம்: மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு ரொம்ப சுமார், சூதானமா இருங்க

March Rasipalan: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போது, ​​அது 12 ராசிகளையும் பாதிக்கிறது. ஜோதிடத்தின் பார்வையில் மார்ச் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் சுக்கிரன், சனி, சூரியன், புதன் போன்ற பெரிய கிரகங்களில், மார்ச் மாதத்தில் ராசி, நட்சத்திரம் இயக்கம் போன்றவற்றில் மாற்றம் இருக்கும். 

இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தால் சில ராசிகளுக்கு நன்மையும், சில ராசிகளுக்கு பாதிப்புகளும் ஏற்படும். கிரகங்களில் ஏற்படவுள்ள மாற்றங்களின் அடிப்படையில், மார்ச் மாதம் யாருக்கு எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் காணலாம். 

1 /7

மார்ச் மாத தொடக்கத்திலேயே சனிபகவான் கும்ப ராசியில் உதயமாவார். மார்ச் 6, 2023 அன்று காலை 11.36 மணிக்கு கும்ப ராசியில் சனியின் உதயம் நடக்கும். சூரியன், புதன் ஆகிய கிரகங்களும் கும்ப ராசியில் இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் பலன் கிடைக்கும். இதில் ரிஷபம், சிம்மம், துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகள் அடங்கும்.

2 /7

மாரச் மாதத்தின் நடுவில் சூரியபகவான் ராசி மாறுவார். மார்ச் 15ம் தேதி காலை 6:13 மணிக்கு அவர் மீன ராசியில் பிரவேசிக்கிறார்.

3 /7

ஆடம்பரம் மற்றும் செல்வத்தின் காரணியான சுக்கிரன், மார்ச் 12, 2023 அன்று மீனத்தை விட்டு மேஷ ராசியில் நுழைகிறார். அவர் காலை 8:13க்கு மேஷ ராசிக்கு வருவார்.  

4 /7

மார்ச் மாதம் மேஷ ராசியில் ராகுவின் பார்வை இருக்கும். இந்த மாதம் பரபரப்பாக இருக்கும். நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வரலாம்.

5 /7

சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் கண்காணிப்பில் இருப்பார்கள். மன உளைச்சல்களைச் சந்திக்க நேரிடலாம். பொருளாதார லாபம் குறைவாக இருக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். 

6 /7

கிரகங்களின் சஞ்சாரம் மாறுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். அவர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். செலவுகள் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு அதிகப்படியான உழைப்பு இருக்கும். சக ஊழியர்களுடனான உறவுகள் மோசமடையலாம். 

7 /7

கும்ப ராசிக்காரர்கள் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்திலும் மாற்றங்களைக் காணலாம். குடும்பத்தினருடனான உறவுகள் மோசமடையலாம்.