குரு ராகு சேர்க்கை: குரு சண்டாள யோகம் இந்த ராசிகளை பாடாய் படுத்தும்... ஜாக்கிரதை

குரு ராகு சேர்க்கை, ராசிகளில் இதன் தாக்கம்: ஜோதிடத்தில் குரு-ராகு சேர்க்கை குரு சண்டாள யோகம் என அழைக்கப்படுகிறது. இந்த சேர்க்கை ஒருவரது ஜாதகத்தில் அமைந்தால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

தற்போது ராகு மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். மறுபுறம், ஏப்ரல் 22, 2023 அன்று, குரு பகவானும் மேஷத்தை அடைந்தார். இதன் காரணமாக குரு சண்டால் யோகம் உருவாகியுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி ராகு ரிஷப ராசிக்கு மாறும் வரை இந்த யோகம் இருக்கும். 

1 /8

குரு சண்டாள யோகம்: ராகு குரு சேர்க்கையால் உருவாகும் இந்த யோகம் கல்வி, பண்பு மற்றும் பண வரவை பாதிக்கிறது. முதியவர்கள், பெரியவர்களிடம் தவறாக நடந்துகொள்பவருக்கு மூச்சு மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் வரலாம்.

2 /8

ராசிகளில் தாக்கம்: குரு சண்டாள யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் மீனம், கும்பம், விருச்சிகம், கன்னி, சிம்மம், ரிஷபம், மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு குரு சண்டாள யோகம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த முறை குரு சண்டாள யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

3 /8

மேஷம்: இந்த ராசியில் குரு சண்டால் யோகம் உருவாகும். எனவே, உறவுகள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிய விவாதம் கூட பெரிய வடிவத்தை எடுக்கும். சர்ச்சையில் சிக்காமல் இருப்பது நல்லது. அலுவலக வேலை பார்ப்பவர்களாக இருந்தால் மிகவும் கவனமாக இருங்கள். அக்டோபர் 30 வரை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

4 /8

மிதுனம்: இந்த ராசிக்கு 11-ம் வீட்டில் குரு சண்டாள யோகம் உருவாகியிருப்பதால் உங்களுக்கு இந்த நேரம் அவ்வளவு நன்றாக இல்லை. பண இழப்பு ஏற்படலாம். திருமண வாழ்வில் குழப்பங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அவமானங்களைச் சந்திக்க நேரிடலாம். திடீரென்று பல பிரச்சனைகள் உங்களை சூழ்ந்து கொள்ளும். அனைத்து முடிவுகளையும் நன்றாக யோசித்து பின்னர் எடுங்கள். 

5 /8

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு திடீர் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த தோஷ யோகம் எட்டாம் வீட்டில் அமைவதால், தாயின் உடல்நிலை குறித்து கவலை ஏற்படக்கூடும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படும். மனதில் ஒரு விசித்திரமான அலைச்சல் இருக்கும். உங்கள் நாவையும் மனதையும் கட்டுப்படுத்துங்கள். செலவுகளுடன், குடும்பச் சங்கடங்களும் அதிகரிக்கும்.

6 /8

தனுசு: ஐந்தாம் வீட்டில் குரு சண்டல் யோகம் உருவாகி உங்கள் குடும்ப உறவுகளை பாதிக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். மனச்சோர்வு போன்ற உணர்வுகள் ஏற்படும். ஆனால் விரக்தியடைய தேவையில்லை. குருவின் பரிகாரங்களால் ஆதாயம் அடைவீர்கள்.

7 /8

மீனம்: உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் குரு சண்டாள யோகம் உருவாவது உங்கள் பேச்சைக் கடுமையாக்கும். எதிர்மறையான விஷயங்கள் இதயத்திலும் மனதிலும் சுழன்று கொண்டே இருக்கும். நீங்கள் உறவுகளிலும் ஆரோக்கியத்திலும் பிரச்சனைகளை சந்திக்கும் நிலை ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழிலும் எதிர்மறையாக பாதிக்கப்படும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.