Monkeypox: குரங்கு பாக்ஸ் என்பது ஒரு விலங்கு அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு மூலம் அல்லது வைரஸால் மாசுபட்ட பொருட்களால் மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் ஜூனோடிக் தொற்று ஆகும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உலக நாடுகள் சற்று மீண்டு வரும் நிலையில், தற்போது குரங்கு அம்மை என்ற இந்த புதிய தொற்று பீதியை கிளப்பி வருகிறது. குரங்கு அம்மை என்பது ஒரு தொற்று நோயாகும். இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பின்னர் மனிதரிடமிருந்து மனிதனுக்கும் பரவுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) மங்கி பாக்ஸ் தொற்றை உலக சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
குரங்கு அம்மையின் அடைகாக்கும் காலம் பொதுவாக 6 முதல் 13 நாட்கள் வரை இருக்கும். ஆனால் 5 முதல் 21 நாட்கள் வரையிலும் இது நீளலாம். (புகைப்படம்: PIB Twitter Handle)
குரங்கு அம்மை என்பது பொதுவாக 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் அறிகுறிகளுடன் ஒரு சுய-வரம்பிற்குட்பட்ட நோயாகும். (புகைப்படம்: PIB Twitter Handle)
நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறது. (புகைப்படம்: PIB Twitter Handle)
குரங்கு அம்மை காய்ச்சலுக்கான முக்கிய தடுப்பு உத்தி வைரஸின் வெளிப்பாட்டைக் குறைப்பதாகும். (புகைப்படம்: PIB Twitter Handle)
காயங்கள், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் மற்றும் படுக்கை போன்ற அசுத்தமான பொருட்களுடன் நெருங்கிய தொடர்பு மூலம் குரங்கு அம்மை வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்