Surya Grahan 2024: ஏப்ரல் 08 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழயுள்ளது, இது இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆகும். இந்த நிகழ்வு ஜோதிடத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
54 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் 08 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் இரவு 9.12 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.25 மணி வரை நீடிக்கும். முழு சூரிய கிரகணம் மீன ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் கடக்கும. இது சில ராசிக்காரர்களுக்கு பண விரயம் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏயபடும். நிதி ஏற்ற இறக்கங்களும் நேரிடும். வேலையில் பல சவால்களை சாந்திகக்கலா. முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் அசுபமாக இருக்கும். பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்திலும் நஷ்டம் வரலாம். குடும்ப உறுப்பினரின் உடல்நிலை மோசமடையலாம்.
விருச்சிகம்: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். திருமண வாழ்க்கையில் சிரமங்கள் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் வேலை மாற்ற செய்வதை தவிர்க்கவும்.
தனுசு: சூரிய கிரகணத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். கடன் வாங்கலாம். முதலீடு செய்வதை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையேயான உறவில் விரிசல் ஏற்படலாம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
கும்பம்: சூரிய கிரகணத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேசும் வார்த்தைகளை நிதானத்துடன் பேசவும். குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தாகராறுகள் ஏற்படலாம். நிதி நெருக்கடிகள் ஏற்படலாம், கவனமாக இருக்கவும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.